Shadow

Tag: இயக்குநர் சுசீந்திரன்

2K லவ் ஸ்டோரி – சுசீந்திரனின் ரொமான்ஸ் திரைப்படம்

2K லவ் ஸ்டோரி – சுசீந்திரனின் ரொமான்ஸ் திரைப்படம்

சினிமா, திரைத் துளி
சிட்டி லைட் பிக்சர்ஸ் தயாரிப்பில், முன்னணி இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, ரொமான்ஸ் ஜானரில் உருவாகும் திரைப்படமான, '2K லவ் ஸ்டோரி' படத்தின் முழுப்படப்பிடிப்பும் நிறைவடைந்தது. படக்குழுவினர் 38 நாட்களில் படப்பிடிப்பை முடித்து அசத்தியுள்ளனர். தமிழ்த் திரையுலகில் தனித்துவமான படைப்புகள் மூலம் ரசிகர்களின் மனதை வென்ற இயக்குநர் சுசீந்திரன், நீண்ட இடைவேளைக்குப் பிறகு ரொமான்ஸ் ஜானரில் இப்படத்தை இயக்கியுள்ளார். 2K தலைமுறையின் காதல், நட்பு என அவர்களது வாழ்வைப் பிரதிபலிக்கும் அழகான படைப்பாக இப்படம் உருவாகி வருகிறது. வெடிங் போட்டோஃகிராஃபி எடுக்கும் ஒரு இளைஞர்கள் குழுவின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, அனைவரும் ரசிக்கும் வண்ணம், இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. புதுமுக நாயகன் ஜெகவீர் நாயகனாக நடித்துள்ள இப்படத்தி...
எஸ்ட்ரெல்லா ஸ்டோரீஸின் ‘அயலி’ வெற்றிப் பகிர்வு

எஸ்ட்ரெல்லா ஸ்டோரீஸின் ‘அயலி’ வெற்றிப் பகிர்வு

இது புதிது
அண்மைக்காலமாக வரும் வெப் சீரிஸ் என்று சொல்லப்படுகிற இணைய தொடர்களில், தணிக்கை இல்லை என்கிற சுதந்திரத்தை மட்டும் சாதகமாக எடுத்துக் கொண்டு செயற்கையான ஒரு பரபரப்பு ஏற்படுத்துவதற்காக அதீத வன்முறை, பாலுணர்ச்சி மிகுந்து பார்ப்பவர்கள் முகம் சுழிக்கும்படியான காட்சிகள் வசனங்கள் என்று உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறார்கள். ஆனால் இவற்றுக்கு மத்தியில் அண்மையில் வந்த 'அயலி' என்கிற இணைய தொடர் ஒரு மக்களுக்கான தொடராக மாறி பார்த்தவர்கள் பாராட்டி அடுத்தவர்களுக்கு தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து பரிந்துரைக்கும் படியான ஒரு தொடராக வெற்றி பெற்றுள்ளது. இந்தத் தொடர் இணைய வழியை நோக்கி வெகுஜன மக்களை ஈர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டிருந்ததே இந்தச் சிறப்புக்குக் காரணம். இத்தொடர் ஜீ5 தமிழில் வெளியானது. தயாரிப்பாளர் எஸ். குஷ்மாவதி என்கிற பெண்மணி இதைத் தனது 'எஸ்ட்ரெல்லா ஸ்டோரீஸ் (Estrella stories)’ நிறுவனத்தின் சார்பில...
ஏஞ்சலினா – சுசீந்திரனின் சஸ்பென்ஸ் த்ரில்லர்

ஏஞ்சலினா – சுசீந்திரனின் சஸ்பென்ஸ் த்ரில்லர்

சினிமா, திரைத் துளி
இயக்குநர் சுசீந்திரனின் அடுத்து வரவிருக்கும் “ஏஞ்சலினா” திரைப்படம் நல்ல எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. ஏனெனில் அவரது முந்தைய திரைப்படங்களில் ஒன்றான “ஆதலால் காதல் செய்வீர்” இதே மாதிரி வண்ணமயமான, இளமைத்தன்மையை கொண்ட அதே நேரத்தில், ஒரு அழுத்தமான கருத்தை அதன் முடிவில் கொண்டிருந்தது. சமீபத்தில் சுட்டுப்பிடிக்க உத்தரவு படத்தில் நடித்ததற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்த மகிழ்ச்சியில் இருக்கும் இயக்குநர் சுசீந்திரன், இந்தப் படத்தை பற்றி கூறும்போது, "ஏஞ்சலினா அடிப்படையில் ஒரு சஸ்பென்ஸ் திரில்லர். படமே ஒரு விசாரணையில் தான் துவங்குகிறது. அதே சமயத்தில் இளைஞர்களின் கதாபாத்திரங்களை உள்ளடக்கிய கதையையும் இதில் நான் கலந்து சொல்லியிருக்கிறேன். இருப்பினும், படத்தின் மையக்கரு ஒரு பெண் எவ்வாறு வாழ வேண்டும் மற்றும் அவர் எதிர்கொள்ளும் சிக்கல்களை எவ்வாறு கையாள வேண்டும் என்ற சமூக விழிப்புணர்வை அடிப்படையாகக் க...
‘வித்தியசமான கதாபாத்திரம் என்றால் நடிப்பேன்’ – இயக்குநர் சுசீந்திரன்

‘வித்தியசமான கதாபாத்திரம் என்றால் நடிப்பேன்’ – இயக்குநர் சுசீந்திரன்

சினிமா, திரைத் துளி
சுட்டுப்பிடிக்க உத்தரவு எனும் படத்தில் முதல் முறையாக நடிகராக அறிமுகமாகி இருக்கிறார் இயக்குநர் சுசீந்திரன். அவ்வனுபவத்தைப் பற்றிப் பேசிய சுசீந்திரன், " 'சுட்டுப்பிடிக்க உத்தரவு' படத்தில் என் கதாபாத்திரத்திற்கு யாரைத் தேர்வு செய்யலாம் என்ற விவாதத்தில் மிஷ்கின் எனது பெயரைக் கூறியிருக்கிறார். உடனே விக்ராந்த் என்னைத் தொடர்பு கொண்டு என்னை நடிக்க அழைத்தார். இயக்குநர் என் கதாபாத்திரத்தைக் கூறியதும் வழக்கமான பாத்திரமாக இல்லாததால் நடிக்க ஒப்புக்கொண்டேன். அதில் எனக்கு ஓடுவது மட்டுமே சவாலாக இருந்தது. இருப்பினும், இயக்குநர் சொல்வதைச் செய்ய வேண்டுமென்ற மனநிலையோடு சென்றதால் நடித்து முடித்தேன். முதல் பாதி படம் பார்த்த என் குடும்பத்தார்கள் நடிப்பதில் நான் அவசரப்பட்டு முடிவெடுத்து விட்டேனோ என்று நினைத்தார்கள். ஆனால், இரண்டாவது பாதி பார்த்துவிட்டு மகிழ்ச்சியடைந்தார்கள். எனக்கோ, எதுவொன்றைச் செய்தாலும் அத...
சுட்டுப்பிடிக்க உத்தரவு விமர்சனம்

சுட்டுப்பிடிக்க உத்தரவு விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கொள்ளையர்கள் வங்கியைக் கொள்ளையடித்துக் கொண்டு ஓட, அவர்களை விரட்டுகின்றனர் கோவைக் காவல்துறையினர். கொள்ளையர்கள் R.S.புரத்திற்குள் நுழைய, அந்த ஏரியாவிற்குள் யாரும் உள்ளே செல்ல முடியாமலும், உள்ளிருப்பவர்கள் வெளியே வரமுடியாதளவும் சுற்றி வளைக்கிறது காவல்துறை. காவல்துறையின் பிடியில் குற்றவாளிகள் சிக்கினரா என்பதுதான் படத்தின் கதை. கொள்ளையர்கள் பணத்தைத் திருடும் வங்கி, ஒரு மாலின் (mall) மாடியில் இருக்கிறது. நான்கு பேரில் ஒருவன் கூட, வாகனத்தில் தப்பியோடத் தயார் நிலையில் காத்திருக்காமல் ஏன் அப்படியொரு சொதப்பலான திட்டத்தைத் தீட்டினர் எனத் தெரியவில்லை. காரில் இருவர் தான் ஏறுகின்றனர். போலீஸைத் தவிர்க்க அந்தக் கார், பார்க்கிங்கில் இறங்கியதும், மீதமுள்ள இருவர் அங்கு வந்து ஏறிக் கொள்கின்றனர். இப்படியான காட்சிகள், என்ன ஏது என உள்வாங்கிக் கொள்ளும் முன், தடதடவெனக் காட்சிகள் வேகமாய் ஓடுகிறது. திருடர்கள் ஓடு...
ஜீனியஸ் விமர்சனம்

ஜீனியஸ் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஜீனியஸ் என்பதற்கு மேதை எனப் பொருள் கொள்ளலாம். யார் மேதை, எது மேதைத்தன்மை அல்லது மேதையாய் இருப்பது அவசியமா என்ற கேள்விகளைப் படம் எழுப்புகிறது. ஏழாவது வரை ஓடி ஆடி விளையாடிக் கொண்டிருந்த தினேஷ் குமாரை, அவனது தந்தை ராம் மூர்த்தி தினேஷைக் கூண்டிலடித்து, படிப்பைத் தவிர வேறெதுவும் இல்லை என அவனது பதின்பருவத்தைச் சிறைபிடித்து விடுகிறார். ஒருநாள், அவன் வளர்ந்து நல்ல வேலையில் இருக்கும் பொழுது, அவனது மூளை ஷட்-டவுன் ஆகிவிடுகிறது. தனக்குள் பேசிக் கொண்டிருப்பது, எப்பொழுதும் எதையாவது சிந்தித்துக் கொண்டிருப்பது என அவன் மனம் பிறழ்கிறது. அதிலிருந்து எப்படி தினேஷ் குமார் மீள்கிறான் என்பதுதான் படத்தின் கதை. ஆச்சரியப்படுத்துவதற்கு சுசீந்திரன் எப்பொழுதும் தவறுவதில்லை. ஒன்று அசத்தி ஆச்சரியப்படுத்துவார் அல்லது பயங்கரமாகச் சொதப்பி ஆச்சரியப்படுத்துவார். நூறு நிமிடங்களுக்கும் குறைவான கால அளவு கொண்ட படம். படி, படி...
மாவீரன் கிட்டு விமர்சனம்

மாவீரன் கிட்டு விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
'தமிழனாய் இந்தப் படத்தை உருவாக்கியதற்குப் பெருமை கொள்கிறேன்' என சுசீந்திரன் கூறியுள்ளார். அது உண்மை தான். கபாலியில் ரஞ்சித் சாதிக்காததை இயக்குநர் சுசீந்திரன் இந்தப் படத்தில் சாதித்துக் காட்டியுள்ளார். கல்வியால் மட்டுமே மாற்றம் சாத்தியமென மெட்ராஸ் படத்தில் சொல்லியிருப்பார் ரஞ்சித். அதை அலட்சியத்தோடு, 'யார் படிக்க வேண்டாம்?' எனக் கேட்ட எகத்தாள பேர்வழிகளுக்கு, அக்கேள்வியின் அபத்தத்தை 'மாவீரன் கிட்டு' எனும் அழுத்தமான அரசியல் படம் புரிய வைக்கும். அரசியல் படம் மட்டுமன்று சாதீயத்தைப் பேசும் சாதிப்படமும்! அப்படி வரையறுப்பதும் கூடப் பிசகாகிவிடும். இது சமுதாயத்தைப் பிரதிபலிக்கும் சமூகப்படம். கீழக்குடி மக்கள் இறந்தால் அவர்களின் பிணம் உயர்குடி மக்களின் தெரு வழியே கொண்டு செல்லக்கூடாதென தடை உள்ள புதூர் கிராமம் அது. நீதிமன்றம் வரை சென்று பிணத்தைக் கொண்டு செல்ல அனுமதி வாங்கியும் ஆதிக்கச் சாதியினரை மீறி...
ஜீவா விமர்சனம்

ஜீவா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மீண்டுமொரு பள்ளிப் பருவக் காதலையும், தமிழ்நாடு ரஞ்சி அணியில் இடம்பெறும் சாதி அரசியலையும் மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள படம். ஜீவாவாக விஷ்ணு விஷால். மீசை தாடியை நன்றாக ஷேவ் செய்துவிட்டு, பதினோறாம் வகுப்பு படிக்கும் மாணவராக திரையில் அறிமுகமாகிறார். என்னடா இது சோதனை என்றிருந்தாலும் திரைக்கதை ஓட்டத்தில் அந்த எண்ணம் மெல்ல மறையத் தொடங்குகிறது. கல்லூரிக்கு வந்து கிரிக்கெட்தான் வாழ்க்கை என ஜீவா முடிவெடுத்து, அரசியலால் காயப்படும் பொழுதெல்லாம் மனதில் அப்பாத்திரமாகவே நிற்கிறார். நான் மகான் அல்ல படத்தில், ‘இறகை போல் அலைகிறேன்’ என்ற பாடலில் செய்த மாயத்தை, இப்படத்தில் ஸ்ரீதிவ்யாவைக் கொண்டு செய்துள்ளார் சுசீந்திரன். பள்ளி மாணவியாக அவர் காட்டும் குறும்புத்தனமான முகபாவங்கள் ரசிக்க வைக்கின்றன. விஷ்ணு பள்ளி மாணவர் என்ற கொடுமையை சகிக்க வைக்க பெரிதும் உதவி செய்பவர் ஸ்ரீதிவ்யாவே! ஆனால் என்ன, நாயகனின் தாய...
ஆதலால் காதல் செய்வீர் விமர்சனம்

ஆதலால் காதல் செய்வீர் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
101 நிமிடப்படம்.   கல்லூரி மாணவர்களான கார்த்திக்கும், ஸ்வேதாவும் ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள். கார்த்திகுடனான நெருக்கத்தால் ஸ்வேதா கருவுறுகிறாள். பின் என்ன நடந்தது என்பது தான் படத்தின் கதை.    கார்த்திக்காக நடித்துள்ளவர் சந்தோஷ் ரமேஷ். சில காட்சிகளில் இளித்து பயமுறுத்துகிறார். எனினும் பொறுப்பற்ற கல்லூரி மாணவன் கதாபாத்திரத்தில் அவரை ஏற்றுக் கொள்ளலாம். காதலிக்கவில்லை என்றால் இறந்து விடுவேன் என பேருந்தில் இருந்து விழுகிறார். ஒருவன் உயிரைக் கொடுக்க துணிந்தால், அவன் தன் மீது அதிகமான காதல் வைத்திருக்கான் என நம்புவதை முதலில் தமிழ்ப்பட நாயகிகள் நிறுத்த வேண்டும். உயிரின் மதிப்பை அறியாதவனின் மன முதிர்ச்சி எந்த அளவில் இருக்கும்? தற்கொலை என அச்சுறுத்தி நாயகியிடம் ஈட்டிய வெற்றித் தந்த குதூகலத்தில், கல்யாணத்திற்காக கையை அறுத்து பெற்றோரை அடிபணிய வைக்கிறான். நான் உயிரைக் கொடுக்கப் ...
அழகர்சாமியின் குதிரை விமர்சனம்

அழகர்சாமியின் குதிரை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
அழகர்சாமியின் குதிரை - இலக்கியத்தை திரைப்படமாக்கும் முயற்சிகள் தமிழில் அவ்வப்பொழுது நடந்து கொண்டிருக்கின்றன. தமிழில் அத்தகைய முயற்சியில் தேர்ந்த வெற்றியை 'தில்லானா மோகனாம்பாள்' படம் பெற்றது. தங்கர்பச்சானும் தனது படைப்பான 'ஒன்பது ரூபாய் நோட்'டை திரைப்படமாக இயக்கியுள்ளார். அந்த முயற்சியின் சமீபத்திய நீட்சியாக பாஸ்கர் சக்தி அவர்களின் சிறுகதையான 'அழகர்சாமியின் குதிரை'யை இயக்குநர் சுசீந்திரன் படமாக உருமாற்றியுள்ளார்.ஊரை ரட்சிக்கும் அழகர்சாமிக்கு, திருவிழா எடுத்தால் மட்டுமே மழை பெய்யும் என நம்புகின்றனர் மல்லையாபுரத்து மக்கள். ஆனால் ஊர் எல்லையில் உள்ள கோயில் மண்டபத்தில் இருக்கும் மரக் குதிரை காணாமல் போகிறது. திருவிழா தடைப்படுமே என ஊர் மக்கள் அஞ்சும் நேரத்தில் உயிருள்ள குதிரை ஒன்று ஊருக்குள் வருகிறது. அழகரின் குதிரை தான் அது என மகிழ்ந்து, அக்குதிரையைப் பிடித்துக் கொள்கின்றனர். தனது பொத...