
இளையராஜாவின் இசைக்கான சமர்ப்பணம் – இயக்குநர் ச. பிரேம்குமார்
நான் ச. பிரேம்குமார், '96 படத்தின் எழுத்தாளர் மற்றும் இயக்குநர். கடந்த மார்ச் - 7'ஆம் தேதி 'Cheyyaru Balu official' என்ற Youtube Channel'ல், 'உங்களுக்கு ஆண்மை இல்லையா, என் பாட்டை யூஸ் பண்ணி இருக்கீங்க.. நாக்க புடுங்கறா மாதிரி கேட்ட இளையராஜா' என்ற தலைப்பில் ஒரு காணொளி வெளியானது. அதில் திரு.செய்யாறு பாலு வெளியான மஞ்ஞுமள் பாய்ஸ் மற்றும் நான் எழுதி இயக்கி 2018-இல் வெளியான ‘96 திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட இசைஞானி இளையராஜாவின் பாடல்களுக்கு நாங்கள் முறையான அனுமதி பெறாதவாறு பேசியுள்ளார்.
குறிப்பாக, '96 பற்றிப் பேசும்போது, இசைஞானி இளையராஜா அவர்கள் சொன்னதை மேற்கோள் காட்டியதோடு நிறுத்தாமல், இன்னொரு வார்த்தை, 'பொ' என்கிற வார்த்தையை வேற யாராவது இருந்தா யூஸ் பண்ணி இருப்பாங்க' என்றும் பேசியுள்ளார். மேலும் அதற்கு ‘96 படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா மன்னிப்பு கேட்டதாகவும் சொல்கிறார். வன்மம் நிறை...