Shadow

Tag: இயக்குநர் டிகே

ரவி மரியா – ‘காட்டேரி’ படத்தின் மூன்றாவது கதாநாயகி

ரவி மரியா – ‘காட்டேரி’ படத்தின் மூன்றாவது கதாநாயகி

சினிமா, திரைச் செய்தி
ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பாக K.E.ஞானவேல்ராஜா மற்றும் அபி & அபி நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘காட்டேரி’. காமெடி வித் ஹாரர் த்ரில்லரக உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் வைபவ் கதாநாயகனாக நடிக்க, நாயகிகளாக வரலட்சுமி, ஆத்மிகா, சோனம் பஜ்வா ஆகியோர் நடித்துள்ளனர். சோனம் பஜ்வா ஏற்கனவே ‘கப்பல்’ என்கிற படத்தில் வைபவுக்கு ஜோடியாக நடித்தவர். இவர்கள் தவிர கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், பொன்னம்பலம், சேத்தன், ஜான் விஜய், ரவிமரியா, மைம் கோபி, லொள்ளு சபா மனோகர் மற்றும் பலர் நடித்துள்ளனர். ‘யாமிருக்க பயமே’ என்கிற வெற்றிப்படத்தை இயக்கிய டிகே இந்தப் படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் . படத்தின் ஒளிப்பதிவை விக்கி கவனிக்க, ‘யாமிருக்க பயமே' படத்தில் பின்னணி இசையமைத்த பிரசாத் இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில், தயாரிப்பாளர் K.E.ஞானவேல்ராஜா, இயக்குநர் டீக...
யாமிருக்க பயமே இயக்குநரின் காட்டேரி

யாமிருக்க பயமே இயக்குநரின் காட்டேரி

சினிமா, திரைத் துளி
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் காட்டேரி. இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் டிகே. இவர் ஏற்கனவே யாமிருக்க பயமே, கவலை வேண்டாம் ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் மூலம் கன்னடம், தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வரும் நடிகர் சாய்குமார் அவர்களின் மகன் ஆதித்யா, கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக நடிகை ஓவியா நடிக்கிறார். இப்படத்தின் தொடக்க விழா சென்னை சத்யம் திரையரங்கத்தில் எளிமையாக நடைபெற்றது.இந்தத் தொடக்க விழாவில் நடிகர் சாய்குமார், அறிமுக நாயகன் ஆதித்யா, கௌதம் கார்த்திக், இயக்குநர் டீகே, தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா மற்றும் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். அப்பொழுது காட்டேரி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது....
கவலை வேண்டாம் விமர்சனம்

கவலை வேண்டாம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
யாமிருக்க பயமே என்ற வெற்றிப்படத்தைக் கொடுத்த இயக்குநர் டி.கே-வின் இரண்டாம் படமென்ற எதிர்பார்ப்பு இருந்தது. பேய் உலகத்தில் இருந்து, முற்றிலும் விலகி இளமை, காதல் என்ற ஜானரை முயன்றுள்ளார் இயக்குநர். இரண்டு படத்துக்குமான ஒரே ஒற்றுமை, இரண்டு படங்களுமே நகைச்சுவையைப் பிரதான அம்சமாகக் கொண்டுள்ளது மட்டுமே! ஜீவாவும், காஜல் அகர்வாலும் சிறு வயது முதல் நண்பர்கள். காதலித்துக் கல்யாணம் செய்து கொண்ட முதல் நாளே பிரிந்து விடுகின்றனர். காஜல் அகர்வாலுக்கு பாபி சிம்ஹாவுடன் காதல் ஏற்படுகிறது. பிரிந்த ஜோடிகள் ஒன்றிணைந்தனரா அல்லது காஜல் பாபியுடன் ஜோடி சேர்கிறாரா என்பதுதான் படத்தின் கதை. தம்பதிக்குள்ளான ஈகோவையும் புரிதலின்மையும் சுற்றி நிகழும் கதை. ஆனால், கதாபாத்திர வடிவமைப்பில் போதிய ஆழமில்லாததால், நாயகன் நாயகி சேரவேண்டுமென்ற எண்ணம் படம் பார்க்கும் பொழுது எழவில்லை. கதாபாத்திரங்களோடு பொருத்திப் பார்த்துக் க...
“பயம் சிறுத்தையால்தான்” –‘யாமிருக்க பயமே’ மயில்சாமி

“பயம் சிறுத்தையால்தான்” –‘யாமிருக்க பயமே’ மயில்சாமி

சினிமா, திரைச் செய்தி
‘யாமிருக்க பயமேண்’ எதிர்பார்த்ததை விட வெற்றிகரமாக திரையரங்கில் ஓடி வருகிறது. எம்.ஜி.ஆர். படங்களைத் தவிர எந்தப் படத்தையும் பார்க்க விரும்பாத மயில்சாமியை, தினம் 5 நபர்களுக்குக் குறையாமல் தொலைபேசியில் அழைத்துப் பாராட்டி வருகின்றனராம். “எனக்கு தமிழ் எழுதப் படிக்கத் தெரியாது. அதனால் வருத்தப்படுறேன். ஹிந்தி பேசக் கூடத் தெரியாது. அதனால் வேதனைப்படுறேன். ஆங்கிலம் சுத்தமா வராது. அதனால் வெட்கப்படலை. ஏன் சொல்றேன் என்றால்.. தமிழ்நாடு தவிர வேற எங்கயும் ஷூட்டிங்குக்குப் போக மாட்டேன். பெரும்பாலும் தவிர்த்துடுவேன். ஆனா ‘யாமிருக்க பயமேன்’ படத்துக்கு நைனிட்டாலில் 3 நாள் ஷூட்டிங் எனச் சொன்னாங்க. டெல்லி ஏர்போர்ட்டில் இறங்கி அங்கிருந்து கார்ல போறேன் போயிட்டே இருக்கு. 10 மணி நேரத்துக்கு மேல ட்ராவல். எடுத்துட்டுப் போனதும் காலியாகிடுச்சு (இடதுக்கையால் பாட்டிலை சைகை காட்டுறார்). முன்பே இது மாதிரிதான் ஹைதராபாதில்...
யாமிருக்க பயமே விமர்சனம்

யாமிருக்க பயமே விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கொள்ளியூர் கிராமத்தில் இருக்கும் கழுகு எஸ்டேட்டைப் புணரமைத்து, ‘குளுகுளு ரிசார்ட்’ ஆகத் திறக்கிறார் கிரண். அங்கே நிகழும் அமானுஷ்ய சம்பவங்களால் செய்வதறியாது திகைக்கும் கிரணின் கதியென்ன என்பதுதான் படத்தின் கதை. கழுத கெட்டா குட்டிச் சுவர் என்பது போல் பேய் கெட்டா பாழடைந்த பங்களா போலும். எப்பொழுதாவது பாழடைந்த குடிசையில் பேய் உலாவுவதாகக் கேள்விப்பட்டுள்ளீரா? வாரிசில்லாத பணக்காரர்கள்தான் பேய்களாக மாறுகிறார்களோ என்னவோ! தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பது பேயான பின்னும் பொருந்தும் போலும். தான் வாழ்ந்த மாளிகைக்கு அந்நியர் வந்தால்தான் பேயுக்கு கோபம் வந்து விடுகிறது. ‘தனது’ என்ற பிடிப்பும், தீராத மோகமும் மனிதனுக்கு மட்டுமல்ல பேயுக்கும் உண்டு என்பதே இந்தப் படத்தின் மையக்கரு. மேலே உள்ள பத்தியில் பேய் என்ற சொல்லுக்கு பொதுப்படையான பொருள் எடுத்துக் கொள்ளக்கூடாது. மேற்கூறிய இலக்கணங்கள், “பங்களா பேய்”க...
யாமிருக்க பயமே!

யாமிருக்க பயமே!

சினிமா, திரைத் துளி
  'பயம்' என்ற ஒரு வார்த்தை உள்ளடக்கிய ஏராளமான அர்த்தங்களை மையமாகக் கொண்டு முற்றிலும் மாறுபட்ட கதை அம்சமும்  காட்சி அமைப்பும் கொண்ட படம் தான் 'யாமிருக்க பயமே'. விண்ணைத் தாண்டி வருவாயா, முப்பொழுதும் உன் கற்பனைகள் , நீதானே என் பொன் வசந்தம் , ஆகிய வெற்றி படங்களைத் தொடர்ந்து ஜீவா நடிப்பில், பிரபல ஒளிபதிவாளர் ரவி.கே.சந்திரன் இயக்கத்தில் ஏராளமான பொருட்செலவில் தயாராகும் 'யான்' படத்தைத் தயாரித்து வரும் ஆர்.எஸ்.இன்ஃபோடைன்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார் மற்றும் ஜெயராமன் தயாரித்து வழங்கும் அடுத்த படத்தின் தலைப்புதான் 'யாமிருக்க பயமே'. இயக்குனர் கே.வீ.ஆனந்திடம் இணை இயக்குநராக பணியாற்றிய டி.கே. இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். கிருஷ்ணா, ரூபாமஞ்சரி, ஆதவ் கண்ணதாசன், கருணா மற்றும் ஓவியா நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க நைனிடாலில் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ப...
இல்ல ஆனாலும் இருக்கு

இல்ல ஆனாலும் இருக்கு

சினிமா, திரைத் துளி
மனம் கவரும், இளமை தளும்பும், தொழில் நுட்பத்தில் முத்திரை பதிக்கும் தரமான படங்களை மிகப் பிரம்மாண்டமாகத் தயாரிக்கும் ஆர்.எஸ்.இன்போடைன்மென்ட் நிறுவனம்,  விண்ணை தாண்டி வருவாயா, கோ, முப்பொழுதும் உன் கற்பனைகள், நீதானே என் பொன் வசந்தம்  ஆகிய படங்களை  தொடர்ந்து தற்போது ரவி. கே.சந்திரன் இயக்கத்தில் ஜீவா ஜோடியாக துளசி நடிக்கும் 'யான்' படத்தைப் பிரம்மாண்டமாகத் தயாரித்து வருகிறது. தலைப்பில் மட்டுமின்றி படத்தின் தரத்திலும் வித்தியாசமாக இருக்க முனையும் இந்த நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பு  'இல்ல ஆனாலும் இருக்கு'. நகைச்சுவை கலந்த திகில் படமான 'இல்ல ஆனாலும் இருக்கு' திரைப்படத்தில் 15 புதிய தொழில் நுட்ப கலைஞர்கள் அறிமுகமாக உள்ளனர். 'ஒரே படத்தில் இவ்வளவு கலைஞர்களை அறிமுகப்படுத்துவது   மிகவும் பெருமைக்குரியது. இவர்கள் எல்லோருமே நிச்சயமாகத்  திரையுலகில்  பிரக...