Shadow

Tag: இயக்குநர் தனா

ஹிட்லர் விமர்சனம்

ஹிட்லர் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
படைவீரன் (2018), வானம் கொட்டட்டும் (2020) ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் SA தனாவின் மூன்றாவது படம். 'வானம் கொட்டட்டும்' எனக் கதைக்குப் பொருந்தும் கவித்துவமான தலைப்பை வைத்தவர், இப்படத்திற்கு 'ஹிட்லர்' எனும் பொருந்தாத தலைப்பை வைத்திருக்கும் வாய்ப்புக் குறைவாகவுள்ளது. 'பிச்சைக்காரன்' எனும் எதிர் தலைப்பு ஈட்டிக் கொடுத்த வெற்றியினால் உந்தி, 'சைத்தான் (2016)', 'எமன் (2016)', 'திமிரு பிடிச்சவன் (2018)', 'கொலைகாரன் (2019)' என எதிர் தலைப்புகள் வைப்பதில் ஆர்வம் காட்டினார் விஜய் ஆண்டனி. அதன் தொடர்ச்சியாக 'ஹிட்லர்' எனும் தலைப்பையும் கணக்கில் எடுத்துக் கொண்டுள்ளார் எனப் படுகிறது. மற்ற தலைப்புகளில் இல்லாத அரசியல் பிழைத்தனம் 'ஹிட்லர்' எனும் தலைப்பில் உள்ளது. நாயகனை ஹிட்லர் என அழைத்து, அம்மனிதகுல விரோதியை மகிமைப்படுத்துவது பெருங்குற்றத்தில் வரும். இயக்குநர், வில்லனின் சர்வாதிகாரத்தன போக்கைக் குறிக்கும் ...
வானம் கொட்டட்டும் விமர்சனம்

வானம் கொட்டட்டும் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தேனி மாவட்டத்தில் பாசமான அண்ணன் தம்பி பாலாஜி சக்திவேலும், சரத்குமாரும். ஒரு உள்ளூர் தேர்தல் பிரச்சனையில் பாலாஜி சக்திவேலை வெட்ட, அண்ணனுக்காக எதிராளிகளை வெட்டிவிட்டு 20 வருடங்கள் சிறைக்குச் செல்கிறார் சரத்குமார். ராதிகா தனி ஆளாக இருந்து விக்ரம் பிரபுவையும், ஐஸ்வர்யா ராஜேஷையும் வளர்க்கிறார். விக்ரம் பிரபு கோயம்பேடு மார்கெட்டில் வாழைக்காய் மண்டி வைக்கிறார். 20 வருடங்கள் கழித்துச் சிறையில் இருந்து வரும் சரத்குமாரை விக்ரம் பிரபுவும் ஐஸ்வர்யா ராஜேஷும் வெறுக்கிறார்கள். இதே நேரம் சரத்குமாரால் இறந்து போனவரின் மகன் நந்தா, சரத்குமாரைக் கொலை செய்யத் துரத்துகிறான். கடைசியில் விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் சரத்குமாரை ஏற்றுக் கொண்டார்களா, நந்தா சரத்குமாரைப் பழி வாங்கினாரா என்பதுதான் கதை. தேனியின் அழகை கேமராவில் அழகாகக் காட்டியுள்ளனர். அந்த வாழைத் தோட்டம் மிக அழகு. இப்படத்தில் சரத்குமாரும்...
படைவீரன் விமர்சனம்

படைவீரன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஆண்ட பரம்பரை என்ற பெருமையைத் தலையில் சுமந்தவாறு திரியும் முனீஸ்வரன், படைவீரனாய்க் காவல்துறையில் சேருகிறான். 'சாதிக்கு ஒன்னுன்னா பெத்த தாயைக் கூடக் கருவறுப்பேன்' என்று நாயகனின் நண்பன் சொல்வான். இவ்வசனத்தை, படத்தின் ஒரு வரிக்கதையாகக் கொள்ளலாம். படம் ஒரு முக்கியமான அம்சத்தைத் தொடுகிறது. அது சாதிப்பற்று மனிதத்தன்மையை அழித்து எப்படி வெறியாகப் பரிணமிக்கிறது என்பதே! ஊரிலேயே இருக்கும் இளைஞர்களுக்கும் மத்திம வயது பெண்களுக்கும், அவர்களை வழிநடத்தும் பழமையில் ஊறிய தலைவனுக்கும் அவ்வெறி நிறைந்துள்ளது. தன் சகோதரியை ஊர்ப் பெண்கள் கூடிக் கொலை செய்யும் பொழுது, அந்த அண்ணனுக்கு எந்தப் பதற்றமும் எழுவதில்லை. சாதிப் பெருமையைக் காப்பது தான் தங்கள் தலையாயக் கடமையெனக் கருதிக் கொலை செய்யும் பெண்களுக்கோ எந்தக் குற்றயுணர்ச்சியுமில்லை! 'உங்களுக்கு என்ன செய்யணும்னு தெரியாதா?' என்று தலைவராக வரும் கவிதா பாரதியின் கேள்...