அமிதாப் பச்சனின் முதல் தமிழ்ப்படம்
இந்தியத் திரையுலகின் பிதாமகன், அகில இந்திய சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தமிழில் நடிக்கிறார். எஸ்.ஜே.சூர்யாவுடன் இணைந்து தமிழ் வாணன் இயக்கத்ததில் அவர் நடிக்கவுள்ள படத்தின் பெயர் "உயர்ந்த மனிதன்".
திருச்செந்தூர் முருகன் ப்ரொடக்ஷன்ஸ் என்ற படநிறுவனத்தின் சார்பில் சுரேஷ் கண்ணன் மற்றும் ஃபைவ் எலிமன்ட் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர். இந்தப் படம் தமிழ், ஹிந்தி ஆகிய இரு மொழிகளில் படமாக்கப்பட உள்ளது.
"ஒரு துணை இயக்குநராகத் திரையுலகில் கால் பதிக்கும் காலத்தில் இருந்தே எனக்கு அமிதாப் சார் மீது அளவில்லாத பிரியம். அவருடன் இணைந்து நடிப்பது தான் எனக்குக் கிடைத்த மிகப் பெரிய வரம்" என்கிறார் எஸ்.ஜே.சூர்யா. மார்ச் 2019 இல் படப்பிடிப்புத் துவங்க உள்ளது. மற்ற நடிக, நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர் தேர்வு நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.
இயக்குநர், நடிகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகத் தி...