Shadow

Tag: இயக்குநர் தினகரன் சிவலிங்கம்

பாட்டல் ராதா விமர்சனம்

பாட்டல் ராதா விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
குடி நோய், ஒரு மனிதனை என்ன செய்யும், அவன் என்னென்னவெல்லாம் இழக்கிறான் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளது படம். இது மற்ற நோய்களைப் போல் உடற்பாதிப்பையும், மன அழுத்தத்தையும், பொருளாதாரத்தையும் மட்டும் காவு வாங்காமல், அவற்றோடு சேர்த்து சமூகத்தில் மதிப்பையும் மரியாதையையும் மொத்தமாகக் காலி செய்துவிடும். அனைவராலும் ஒதுக்கப்படும் ஈனநிலைக்குத் தள்ளிவிடும். அப்படித் தள்ளப்படும் பாட்டல் ராதா என பெயரைப் பெற்ற ராதாமணியின் வீழ்ச்சியும் மீட்சியும்தான் படத்தின் கதை. குடி நோயாளி வீட்டுக் குழந்தைகளின் கண்களில் தெரியும் பாரத்தை எதிர்கொள்வது மிகவும் கடினம். அந்த சிறிய மனங்கள் சுமக்கும் வலி மிகக் கொடுமையானது. ராதாமணியின் மகளை, 'பாட்டல்' என்ற பட்டப்பெயரில் அழைத்து, அச்சிறுமியைத் தனிமையில் தள்ளி விடுகின்றனர். ஓடி ஆடி விளையாட வேண்டிய பருவத்தில் நட்பில்லாமல் தனிமைப்படுத்திக் கொள்ளும் அவலம் எச்சிறார்க்கும் நிகழக...
“பாட்டல் ராதா | சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் படம்” – வெற்றிமாறன்

“பாட்டல் ராதா | சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் படம்” – வெற்றிமாறன்

இது புதிது, சினிமா, திரைச் செய்தி
இயக்குநர் பா. இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் பலூன் பிக்சர்ஸ் அருண்பாலாஜி தயாரிப்பில் அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கியிருக்கும் படம் ‘பாட்டல் ராதா’ ஆகும். இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார்.குருசோமசுந்தரம், சஞ்சனா, ஜான் விஜய், மாறன், மற்றும் பலர் நடித்திருக்கும் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டுவிழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் படக்குழுவினரோடு சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் வெற்றிமாறன், லிங்குசாமி, அமீர், மிஸ்கின் ஆகியோர் கலந்து கொண்டனர்.லிங்குசாமி, “இந்தப் படம் தமிழில் மிகச் சிறந்த படமாக, இந்தக் காலகட்டத்திற்குத் தேவையான ஒரு படமாக வந்திருக்கிறது. ஜனரஞ்சகமாக அதே சமயம் கருத்துள்ள படமாக இருக்கிறது. இந்தப் படம் அரசாங்கத்திற்கு போடும் மனு போல . அவசியமானதொரு படம். இந்தப் படம் பெரும் வெற்றியடையும்” என்றார்.அமீர், “இந்த கதையைப் போல குடி நோயால் பாதிக்க...