
மணிரத்னத்தின் அசிஸ்டென்ட் இயக்கத்தில் ‘துப்பாக்கி முனை’
"சட்டத்தை இந்தச் சமூகம் கேடயமாகப் பயன்படுத்துகிறது. அனால் நான் வாளாகப் பயன்படுத்துகிறேன். முன்பு வறுமை குற்றவாளிகளை உருவாக்கியது. இன்று அதிகாரம் குற்றவாளிகளை உருவாக்குகிறது. தேசதந்தை காந்தியைச் சுட்ட துப்பாக்கி தவிர சமுயாதயத்திற்காகச் சந்தன மரமாய்த் தேய்ந்து தேய்ந்து மனம் வீசி கொண்டிருக்கும் ஒவ்வொரு போலீசரிடமும் உள்ள துப்பாக்கிகள் எல்லாம் மதிப்பு மிக்கவை என்பது ஸ்பெசலிஸ்ட் பிர்லா போஸின் உறுதியான கருத்து. தன் கருத்தில் உறுதியாக இருக்கும் போஸின் வாழ்க்கையில் அவர் இழந்தது என்ன, பெற்றது என்ன என்பதே இந்தத் ‘துப்பாக்கி முனை’ கதையின் சுருக்கம். மேலும் போலீஸ் அதிகாரி பிர்லா போஸ் கதாபாத்திற்காக நரைமுடி தலையுடன் 45 வயது தோற்றத்தில் விக்ரம் பிரபு சிறப்பாக நடித்துள்ளார். படத்தின் கதையும், விக்ரம் பிரபுவின் வித்தியாசமான தோற்றமும் படத்தின் பெரும்பலம்” என்று இயக்குநர் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார். இந்...