Shadow

Tag: இயக்குநர் நாகா

தலைவெட்டியான் பாளையம் – ட்ரெய்லரும் பேட்டியும்

தலைவெட்டியான் பாளையம் – ட்ரெய்லரும் பேட்டியும்

OTT, Trailer, காணொளிகள்
இயக்குநர் நாகா இயக்கத்தில் உருவாகி இருக்கும் அசல் தமிழ் இணையத் தொடரான 'தலைவெட்டியான் பாளையம்' எனும் தொடருக்கு பாலகுமாரன் முருகேசன் கதை எழுத, தி வைரல் ஃபீவர் எனும் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இனிமையான மற்றும் ஆழமான கதைச் செழுமையுள்ள இந்த இணையத் தொடருக்கு எம். எஸ். கிருஷ்ணா இசையமைத்திருக்கிறார். ‘தலை வெட்டியான் பாளையம்’ இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் செப்டம்பர் 20 ஆம் தேதி அன்று பிரைம் வீடியோவில் பிரத்தியேகமாக வெளியாகிறது. இத்தொடரின் முன்னோட்டத்தை செப்டம்பர் 13 அன்று வெளியிட்டது பிரைம் வீடியோ. எட்டு அத்தியாயங்கள் கொண்ட இந்த நகைச்சுவை இணைய தொடர், தமிழகத்தின் தொலைதூர கிராமமான தலைவெட்டியான் பாளையத்திற்குச் செல்லும் மாநகரத்தைச் சேர்ந்த ஒருவரின் பயணத்தை மையமாகக் கொண்டிருக்கிறது. இந்த இணைய தொடரில் அபிஷேக் குமார், சேத்தன் கடம்பி, தேவதர்ஷினி, நியாதி, ஆனந்த் சா...
வன்முறைப்பகுதி விமர்சனம்

வன்முறைப்பகுதி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் பார்க்கும் பொழுது, சில படங்கள் பயங்கர ஆச்சரியத்தை ஏற்படுத்தும். அப்படியொரு படமிது. மிகக் குறைவான பட்ஜெட், அறிமுக இயக்குநர் என்பதெல்லாம் மீறிப் படத்தின் முதல் ஃப்ரேமிலிருந்தே படத்தில் தெரியும் நேட்டிவிட்டி ரசிக்க வைக்கிறது. வீட்டுக்கோ, ஊருக்கோ, எவருக்குமோ அடங்காத காலிப்பயல் முனியசாமி. சகோதரர்களான சன்னாசியும், வேலுவும் சொந்த சித்தப்பாவையே குத்திச் சாய்க்கும் சண்டியர்கள். அவர்களின் தங்கை தவமணிக்கு முனியசாமியை நிச்சயம் செய்கின்றனர். கல்யாணம் நின்று விட, முனியசாமிக்கும் சண்டியர்களான சகோதரர்களுக்கும் முட்டிக் கொள்கிறது. அதன் விளைவு மிகக் கொடூரமானதாய் இருக்கிறது. மேலே சொல்லப்பட்ட ஒரு வரிக் கதைக்கருவைப் பார்த்தால் வன்முறைப்பகுதி என்ற பெயர் சரியானதாகப்படும். ஆனால், படத்தின் மிகப் பெரிய பலவீனமே அதன் தலைப்புத்தான். படத்தின் கன்டென்ட்டையும் கருவையும் சிதைக்கும் கொடும...