Shadow

Tag: இயக்குநர் நித்திலன்

Fourth Floor – எதிர்பார்ப்பை எகிற வைக்கும் த்ரில்லர்

Fourth Floor – எதிர்பார்ப்பை எகிற வைக்கும் த்ரில்லர்

சினிமா, திரைத் துளி
மனோ கிரியேஷன் சார்பில் தயாரிப்பாளர் ராஜா தயாரிப்பில், இயக்குநர் L.R. சுந்தரபாண்டி இயக்கத்தில், நடிகர் ஆரி அர்ஜுனன் கதாநாயகனாக நடிக்கும், பரபர த்ரில்லர் திரைப்படம் “ஃபோர்த் ஃப்ளோர்” ஆகும். தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டமாக, தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் விஜய் சேதுபதி, ஆர்யா மற்றும் இயக்குநர் நித்திலன் ஆகியோர் இப்படத்தின் அதிரடி ஃபர்ஸ்ட் லுக்கை சமூக வலைத்தளம் வழியே வெளியிட்டுள்ளனர். சென்னையின் மையப்பகுதி ஒன்றில், நடக்கும் பரபரப்பான சம்பவங்கள் தான் இப்படத்தின் கதை. அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை எகிற வைக்கும் வகையில், ஆச்சரியப்பட வைக்கும் திருப்பங்களுடன், இதுவரை பார்த்திராத த்ரில்லர் அனுபவத்தை தரும் வகையில், இப்படத்தின் திரைக்கதையை அமைத்துள்ளார் இயக்குநர் L.R. சுந்தரபாண்டி. சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இப்படத்தில் ந...
சிறுவர்கள் வளரும் வரை காத்திருந்த ‘மின்மினி’

சிறுவர்கள் வளரும் வரை காத்திருந்த ‘மின்மினி’

சினிமா, திரைச் செய்தி
ஸ்டேஜ் அன்ரியல், பேபி ஷூ புரொடக்ஷன்ஸ் & ஆங்கர் பே ஸ்டுடியோஸ் வழங்கும் ஹலிதா ஷமீம் இயக்கத்தில், கதிஜா ரஹ்மான் இசையில், கௌரவ் காளை, எஸ்தர் அனில் மற்றும் பலர் நடித்துள்ள ’மின்மினி’ திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகிறது. படத்தின் ட்ரெய்லர், இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் நித்திலன் சாமிநாதன், "'மின்மினி' படத்தின் பாடல்கள், ட்ரெய்லர் எல்லாமே சூப்பராக உள்ளது. பெரிய மெனக்கெடல் இந்தப் படத்திற்குத் தேவைப்படுகிறது. ஹலிதா படங்களின் டைட்டிலுக்கு நான் மிகப்பெரிய ரசிகன். சில்லுக்கருப்பட்டி, மின்மினி என டைட்டில் எல்லாமே ஹைக்கூ போல இருக்கும். படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள், ரஹ்மான் சார் குடும்பத்தின் இசை இளவரசி கதிஜாவுக்கும் வாழ்த்துக்கள்" என்றார். ஒளிப்பதிவாளரும் தயாரிப்பாளருமான மனோஜ் பரமஹம்சா, "ஆட்டோ சங்கர் எடுத்தபோது என்னைப் பலரும் திட்டினார்கள். ஆனால், அதற்கு பதிலடியாக நிச...
குரங்கு பொம்மை விமர்சனம்

குரங்கு பொம்மை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
புன்னகை வாங்கினால் கண்ணீர் இலவசம் என்ற குறும்படம், இயக்குநர் நித்திலனுக்கு 'குரங்கு பொம்மை' படத்திற்கான வாய்ப்பைப் பெற்றுத் தந்ததுள்ளது. அதைச் சரியாக உபயோகப்படுத்திக் கொண்டுள்ளார் நித்திலன். ஒரு பேருந்து நிறுத்தத்தில், பெரியவர் ஒருவரின் குரங்கு பொம்மை அச்சிடப்பட்ட பை ஒன்று நாயகனுக்குக் கிடைக்கிறது. அந்தப் பையில் என்ன உள்ளது என்றும், அது நாயகனின் வாழ்வில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுத்துகிறது என்பதும் தான் படத்தின் கதை. படத்தின் முதற்பாதி தன்னுள் பார்வையாளர்களை இழுத்துக் கொள்கிறது. நடிகர்கள் அனைவரையும் அறிமுக இயக்குநர் நித்திலன் மிக அழகாக உபயோகப்படுத்தியுள்ளார். இயக்குநர் பாரதிராஜாவுக்குள் இருக்கும் அசலான நடிகனை வெளிக்கொணர்ந்துள்ளார் நித்திலன். நடிப்பிலும் தான் இமயம் தானென நிரூபித்துள்ளார். பிரதான கதாபாத்திரங்களைத் தாண்டிப் படத்தில் வரும் அத்தனைப் பேரையும் ரசிக்க முடிவது தான் படத்தின் சிறப்...