Shadow

Tag: இயக்குநர் பா.ரஞ்சித்

தங்கலான் – ஆள்வதற்கான உரிமையை நோக்கி

தங்கலான் – ஆள்வதற்கான உரிமையை நோக்கி

இது புதிது, சினிமா, திரைத் துளி
(தங்கலான் விமர்சனத்தில், ரஞ்சித்தின் அரசியலில் முரண் உள்ளதென்ற கூற்றுக்கு வந்த எதிர்வினையே இக்கட்டுரை.) //தன் வரலாற்றை மறந்திருக்கும் போது, விவசாய நிலத்தின் மீதும், வரலாற்றை உணர்ந்ததும் தங்க பூமியின் மீதும் உரிமை கோருகிறான் நாயகன். இந்த முரணிலேயே படத்தின் ஒட்டுமொத்த சுவாரசியம் வடிந்துவிடுகிறது. இந்த முரண், ரஞ்சித் தீவிரமாகப் பேசி வரும் அரசியலையே சுய பகடி செய்கிறது. // படத்தில், தங்கம் என்பது ஓர் உருவகமாகக் (Metaphor) கையாளப்பட்டுள்ளது. தங்கம் என்பது இங்கே பெளதீக வடிவத்தில் இருக்கும் உலோகத்தைக் குறிக்கவில்லை. மாறாக அது உரிமையைச் சுட்டுகிறது. வெறுமனே நிலத்தை அனுபவிப்பதற்கான உரிமை இல்லை, ஆள்வதற்கான உரிமையாக உருவகப்படுத்தியுள்ளார் ரஞ்சித். //விவசாய நிலத்தின் மீது உரிமை // நிலத்தை ஆளும் உரிமை வைத்திருந்தவனை, அதிகாரவர்க்கத்துக்கு வரி கட்டிக் கொண்டு, நிலத்தை உழுது அனுபவிக்கும் உரிமையை மட்டு...
“தங்கலான்: காலத்தைக் கடந்த பொக்கிஷம்” – பா. ரஞ்சித் பெருமிதம்

“தங்கலான்: காலத்தைக் கடந்த பொக்கிஷம்” – பா. ரஞ்சித் பெருமிதம்

சினிமா, திரைச் செய்தி
ரசிகர்களும் ஊடகங்களும் வழங்கிய அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் விழா ஒன்றினைத் தங்கலான் படக்குழுவினர் ஒருங்கிணைத்திருந்தனர். இயக்குநர் பா. ரஞ்சித், "திரைப்படங்கள் ஏன் எடுக்க வேண்டும் என்ற சிந்தனையுடன் திரையுலகில் நுழைந்தேன். இந்தக் கேள்வியுடன் தான் என்னுடைய திரைப் பயணம் தொடர்ந்து நீண்டு கொண்டிருக்கிறது. இந்தப் பயணத்தில் உருவான தங்கலான் முக்கியமான விவாதத்தையும், முக்கியமான வெற்றியையும் தமிழ்ச் சமூகத்தில் ஏற்படுத்தியிருக்கிறது. இதற்காக நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த வெற்றியை அளித்த அனைவருக்கும் நான் இந்தத் தருணத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வெற்றி சாதாரணமானதல்ல. பழக்கப்பட்ட மொழியில் ஒரு படைப்பை வழங்குவது எவ்வளவு கடினமோ, அதைவிட பழக்கமே இல்லாத ஒரு மொழியில் ஒரு படைப்பை வழங்கி அதனை வெற்றி பெற வைப்பது என்பது கடினமானது. மக்களுக்குப் புதுவிதமான அனுபவத்தை...
தங்கலான் விமர்சனம்

தங்கலான் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
சார்பட்டா பரம்பரையின் வெற்றியைத் தொடர்ந்து எழுத்தாளர் தமிழ் பிரபாவும், பா. ரஞ்சித்தும் இணையும் படமென்பதால் எதிர்பார்ப்பு கூடுதலாகவே பார்வையாளர்களிடம் நிலவியது. 'மாய எதார்த்தம் (Magical Realism)' வகைமையைச் சேர்ந்த படம் என இசை வெளியீட்டின் போது, எதிர்பார்ப்பில் எண்ணெயை ஊற்றினார் தமிழ் பிரபா. அத்தனைக்கும் ஆசைப்படு என்கிற ஜக்கி வாசுதேவின் புத்தகத் தலைப்புதான், தங்கலான் படத்தின் மையச்சரடு. நாடாளும் மன்னன், ஆங்கிலப் பேரரசின் அதிகாரி, எல்லா உரிமைகளும் மறுக்கப்பட்ட உழைக்கும் மக்கள் அத்தனை பேரும் தங்கத்திற்கு ஆசைப்படுகின்றனர். நாயகனோ நிலத்திற்கு ஆசைப்படுகிறான். தன் வரலாற்றை மறந்திருக்கும் போது, விவசாய நிலத்தின் மீதும், வரலாற்றை உணர்ந்ததும் தங்க பூமியின் மீதும் உரிமை கோருகிறான் நாயகன். இந்த முரணிலேயே படத்தின் ஒட்டுமொத்த சுவாரசியம் வடிந்துவிடுகிறது. இந்த முரண், ரஞ்சித் தீவிரமாகப் பேசி வரும் அரசியலைய...
“வலியுடன் நடித்த விக்ரம்” – பா.ரஞ்சித் | தங்கலான்

“வலியுடன் நடித்த விக்ரம்” – பா.ரஞ்சித் | தங்கலான்

இது புதிது, சினிமா, திரைச் செய்தி
ஸ்டுடியோ கிரீன் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல் ராஜா மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் இயக்குநர் பா. ரஞ்சித் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்க, இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிக்கும் பிரம்மாண்ட திரைப்படம் தங்கலான். இந்த வருடத்தில் ரசிகர்களிடம் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா நடைபெற்றது. பிரமிப்பை ஏற்படுத்தும் தங்கலான் படத்தின் டீசர் மற்றும் மேக்கிங் வீடியோ திரையிடப்பட்டது. இயக்குநர் பா. ரஞ்சித், “டீசர் உங்களுக்குப் பிடித்திருக்கும் என நம்புகிறேன் நிறையப் பேருக்கு நன்றி சொல்ல வேண்டும். இது டீசர் வெளியீடு தான் இன்னும் பல மேடைகள் இருக்கிறது. இந்தப் படம் நாங்கள் நினைத்ததை விட பட்ஜெட் அதிகமாகி விட்டது, ஆனால் இன்று வரை அதைப் பற்றி ஒரு கேள்வி கூட ஞானவேல் சார் கேட்கவில்லை. அவருக்கு எனக்குமான உறவு 10 ஆண்டுகளுக்கு மேலா...
காலேஜ் ரோடு – கல்வி நிலையங்களின் பிரச்சினைகளைப் பேசும் படம்

காலேஜ் ரோடு – கல்வி நிலையங்களின் பிரச்சினைகளைப் பேசும் படம்

சினிமா, திரைத் துளி
கபாலி, பரியேறும் பெருமாள், கஜினிகாந்த், V1, டானாக்காரன், மற்றும் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த நடிகர் லிங்கேஷ் கதாநாயகனாக நடிக்கும் படம் 'காலேஜ் ரோடு' . கல்வி நிலையங்களில் இருக்கும் மிக முக்கிய பிரச்சினையைப் பற்றி பேசுகிறப் படமாக இருக்கும். இளைஞர்களின் வாழ்வில் கல்வியின் அவசியமும், அந்தக் கல்வி இன்று என்னவாக இருக்கிறது, அது அனைவருக்குமானதாக இருக்கிறதா, எதிர்கால சந்ததியினருக்கு கல்வி என்னவாக இருக்கப் போகிறது என்பதைப் பற்றிப் பேசுகிறபடமாக இருக்கும். பரபரப்பான திருப்பங்களோடு காதல், நட்பு, நகைச்சுவை கலந்த கம்ர்ஷியலான படமாகவும் இருக்கும். கல்லூரி மாணவர்களை மனதில் வைத்து திரைப்படத்தை எடுத்துள்ளோம் என்கிறார் இந்தப் படத்தின் இயக்குநர் ஜெய் அமர்சிங். இந்தப் படத்தைப் பார்த்துத் தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார் இயக்குநர் பா.இரஞ்சித். இந்தப் படத்தைப் பார்த்த கல்லூரி மாணவர்கள...
நட்சத்திரம் நகர்கிறது விமர்சனம்

நட்சத்திரம் நகர்கிறது விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
காதல், நெருக்கம், பாலினப்பண்பு முதலியவற்றை மையமாகக் கொண்டு ஓவியம் தீட்டுவதில் வல்லவரான 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆஸ்திரிய ஓவியர் குஸ்தாவ் க்ளிம்ட் (Gustav Glimt) -இன் மிகவும் புகழ்பெற்ற ஓவியமான The Kiss இலிருந்து படத்தின் ஃப்ரேம் தொடங்குகிறது. படத்தின் மையமும், காதல், நெருக்கம், பாலினப்பண்பு ஆகியவற்றைச் சுற்றியே! இனியனின் அறைச்சுவரில், 'தி கிஸ்' ஓவியமும், பின்னணியில், கறுப்பினப் பெண்மணியான நினா சிமோனின் (Nina Simone) பாடலும் ஒலிக்கிறது. பாடகியும், இசையமைப்பாளருமான நினா சிமோன் ஒரு சமூகச் செயற்பாட்டாளரும் கூட! அதாவது, இனியன் என்பவர் நவீனத்துவத்தின் பால் ஈர்க்கப்பட்ட முற்போக்காளன் என்றறியலாம். தனது இசையின் மூலமாகவும், பிரபல்யத்தின் மூலமாகவும், சமூக உரிமைகளுக்காகப் போராடிய நினா சிமோனோடு ஒப்பிட்டு, இளையராஜாவின் அரசியல் நிலைப்பாட்டின் மீது விமர்சனம் உள்ளவன் இனியன். அவனது காதலியான ரெனே, இனியனி...
பா. ரஞ்சித்தின் சீயான் 61

பா. ரஞ்சித்தின் சீயான் 61

சினிமா, திரைத் துளி
சீயான் விக்ரம் நடிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகும் பெயரிடப்படாத படத்தின் தொடக்க விழா இன்று சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. விரைவில் வெளியாக இருக்கும் 'கோப்ரா', 'பொன்னியின் செல்வன்’ எனும் இரண்டு பிரம்மாண்ட அகில இந்திய அளவிலான படங்களைத் தொடர்ந்து, சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகும் பெயரிடப்படாத புதிய படத்தினை முன்னணி இயக்குநர் பா. ரஞ்சித் இயக்குகிறார். இதனை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ.ஞானவேல் ராஜா, நீலம் புரொடக்ஷன்ஸுடன் இணைந்து தயாரிக்கிறார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் 22 ஆவது தயாரிப்பாகத் தயாராகும் இந்தப் படத்தின் தொடக்க விழா இன்று சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர்கள் சிவகுமார், ஆர்யா, தயாரிப்பாளர்கள் T. சிவா, S.R. பிரபு, அபினேஷ் இளங்கோவன், C.V. குமார், இயக்குநர் சந்தோஷ் பி. ஜெயக்குமார் ஆகியோர் சிற...
“சேத்துமான் – ஒரு பரீட்சார்த்த முயற்சி” – இயக்குநர் பா.ரஞ்சித்

“சேத்துமான் – ஒரு பரீட்சார்த்த முயற்சி” – இயக்குநர் பா.ரஞ்சித்

சினிமா, திரைச் செய்தி
நீலம் புரொடெக்ஷன் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் சேத்துமான். இப்படம் எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய சிறுகதையைத் தழுவி எடுக்கப்பட்டிருக்கிறது. இப்படம் Sony Liv இணையதளத்தில் வெளியாகி தற்போது ஓடிக் கொண்டிருக்கிறது. இயக்குநர் பா.ரஞ்சித், “சேத்துமான் திரைப்படம் ஒரு திரைப்படமா என்பதே எனக்கு முதலில் தெரியவில்லை. அந்தக் கதையை படித்த போது இது ஒரு ஃபீச்சர் ஃப்லிம்மாக இருக்குமா என்கின்ற சந்தேகமும் எனக்கு இருந்தது. என்னோட சந்தேகத்தை நான் இப்படத்தின் இயக்குநர் தமிழிடமும் கேட்டேன். ஆனாலும் இந்தக் கதை என்னை வெகுவாகப் பாதித்தது என்பது மறுக்க முடியாத உண்மை. எனக்கு எப்பொழுதுமே மெயின் ஸ்ட்ரீம் சினிமாக்களைப் போல பேரலல் (Parallel) சினிமாக்கள் என்று சொல்லப்படும் சுயாதீனத் திரைப்படங்கள் மீதும் எனக்கு மிகப்பெரிய ஆர்வம் உண்டு. சுயாதீனத் திரைப்படங்களில் இருக்கின்ற ...
“ரைட்டர்: தமிழ் சினிமாவில் சொல்லப்படாத கதை” – பா.ரஞ்சித்

“ரைட்டர்: தமிழ் சினிமாவில் சொல்லப்படாத கதை” – பா.ரஞ்சித்

சினிமா, திரைச் செய்தி
சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடிந்திருக்கும் ரைட்டர் படத்தை பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய பிராங்க்ளின் ஜேக்கப் இயக்கியுள்ளார். இந்தப் படம் வருகின்ற டிசம்பர் 24 ஆம் தேதி திரைக்கு வருகிறது. அப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய இயக்குநரும் தயாரிப்பாளருமான பா. ரஞ்சித், “தயாரிப்பாளர் அதிதி என் ரசிகையாக என்னைச் சந்தித்தார். காலா படத்தை முதல் நாளில் இரண்டுமுறை பார்த்துள்ளார். பிறகு ரைட்டர் படத்தைப் பற்றிப் பேசி இப்படத்தைத் தயாரிக்க முன் வந்தோம். முதலில் அவர் நான் இயக்கும் படத்தைத் தயாரிக்க வேண்டும் என நினைத்தார். ஆனால் எனக்கு வேறு பட வேலைகள் இருந்ததால் அது முடியவில்லை. அதிதிக்கு சமூக அக்கறை உள்ள படங்களைத் தயாரிக்க மிகவும் ஆசை. பிறகு எங்களுடன் இணைந்தவர்கள் தான் கோல்டன் ரேஷியோ மற்றும் ஜெட்டி புரோடக்சன்ஸ். என்னுடைய அரசியலைப் புரிந்து கொண்டு அவர்கள் குறைந்தபட்சம் ஒரு ஐந்து ப...
விக்ரம் – பா.ரஞ்சித் இணையும் ஸ்டுடியோ க்ரீன் 23ஆவது படம்

விக்ரம் – பா.ரஞ்சித் இணையும் ஸ்டுடியோ க்ரீன் 23ஆவது படம்

சினிமா, திரைத் துளி
சீயான் விக்ரம் தனது அடுத்த படத்தில், இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கிறார். இந்தப் படம் சீயான் விக்ரமின் 61 Aவது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தை ஸ்டூடியோ க்ரீன் K.E.ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பு நிறுவனத்துக்கு இது 23 ஆவது திரைப்படம். விரைவில் படத்தின் மற்ற நடிகர், நடிகையர், தொழில்நுட்பக் குழுவினர் குறித்த அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது. ஹீரோவாக சீயான் விக்ரம் நடிக்கவுள்ள இந்தப் புதிய படத்தின் படப்பிடிப்பும் விரைவில் தொடங்கவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது....
“யாரும் யாரையும் நம்பிப் பிறக்கவில்லை” – பா.ரஞ்சித்

“யாரும் யாரையும் நம்பிப் பிறக்கவில்லை” – பா.ரஞ்சித்

சினிமா, திரைத் துளி
“ஒன் டே புரொடக்சன்ஸ்” நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் “நறுவி” திரைப்படத்தின் இசை மற்றும் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், அதியன் ஆதிரை மற்றும் நடிகர் லிஜீஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டார்கள். இவ்விழாவில் பேசிய இசையமைப்பாளர் கிறிஸ்டி, "இந்தப்படம் எனக்குக் கிடைக்கக் காரணமே இயக்குநர் ரஞ்சித் தான். சினிமா எப்ப வேணும்னாலும் உன்னை மாத்தும் என்று ரஞ்சித் சொன்னார். அப்படியொரு மாற்றம் ரஞ்சித் மூலமாகத்தான் நடந்தது. இந்தப் படத்தில் என்னை கமிட் செய்த தயாரிப்பாளருக்குப் பெரிய நன்றி. அதேபோல் இயக்குநர் ராஜா முரளிதரனுக்கும் பெரிய நன்றி" என்றார். இயக்குநர் பா.ரஞ்சித் பேசுகையில், "பாசிச வெறிகொண்டு இந்தியாவில் சிறுபான்மையினரைக் கொடுமைப் படுத்தும் சூழ்நிலையில் இன்று 'நறுவி' படத்தின் விழாவில் இருக்கிறோம். இந்தப் படத்தில் உழைத்த அனைவருக...
இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு விமர்சனம்

இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
இது ஒரு கற்பனைக் கதை. ஆனால், இந்தக் கதையில் காட்டப்படும் டாக்குமென்ட்ரியில் நிகழ்வது போல் நடப்பதற்கான அத்தனை சாத்தியங்களும் உள்ள மெத்தனமான நாடு இந்தியா என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. கடல்நீரில் கலந்த எண்ணெயை வாளியில் அள்ளும் தொழில்நுட்பத்தில் கை தேர்ந்த அரசாங்கம், கரை ஒதுங்கும் ஆபத்தை விளைவிக்கும் குண்டை, வெடிக்கும் குண்டு என ஒத்துக் கொள்வதற்கே அதன் வெட்டி கெளரவம் இடம் கொடுக்காது. ஏன் உலகிற்கு இத்தனை குண்டுகள், இத்தனை உயிரிழுப்புகள் என்ற கேள்வியை மிக அழுத்தமாக வெளிப்படுத்தியுள்ளது சடோகா சசாகியின் கதை. ஆனால், தினேஷ் வசமிருக்கும் குண்டு வெடித்து விடக் கூடாது என்ற பதைபதைப்பை ஏற்படுத்தத் தவறிவிடுகிறது படம். அரசாங்கத்தின் முகத்திரையைக் கிழிக்கும் ஆவல், தோழர் ரித்விகாவிற்கு அதிகமாக உள்ளதே தவிர, அதை வெடிக்கவிடாமல் செய்ய என்ன மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்றெல்லாம் அவர் யோசிப்பதில்லை. கு...
இரும்புக் கடையின் நீல இசை

இரும்புக் கடையின் நீல இசை

சினிமா, திரை விமர்சனம்
இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பு “இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு”. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் மாரிசெல்வராஜ் பேசியதாவது, "நீலம் புரொடக்சன் இந்த மாதிரி நிகழ்வுகளை நடத்திக் கொண்டே இருக்க வேண்டும். எப்படி ஒரு மாடு மேய்க்கிறவனைக் கொண்டுவந்து 'பரியேறும் பெருமாள்' படத்தை இயக்க வைத்தாரோ, அதே போல் இரும்புக் கடையில் வேலை பார்க்கும் ஒருவரை இப்போது "இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு" படத்தை இயக்க வைத்துள்ளார் அண்ணன் பா.ரஞ்சித். தோழர் அதியன் அவர்களின் அரசியல் எனக்கு மிகவும் பிடிக்கும். 'இப்படியான ஒருவர் படமெடுத்தால் எப்படி இருக்கும்?' என்ற ஆசை எனக்குள் இருந்தது. இப்படத்தை எதைக்கொண்டு தடுத்தாலும் இப்படம் அடைய இலக்கை அடைந்தே தீரும்" என்றார் நடிகை ஆனந்தி, "ரொம்ப சந்தோஷமா இருக்கு. நீலம் புரொடக்சன் என் சொந்...
பரியேறும் பெருமாள்: தந்தைக்கான மகனின் காணிக்கை

பரியேறும் பெருமாள்: தந்தைக்கான மகனின் காணிக்கை

சினிமா, திரைச் செய்தி
நீலம் புரொடக்சன்ஸ் சார்பில் இயக்குநர் பா.இரஞ்சித் தயாரித்திருக்கும் முதல் படம் “பரியேறும் பெருமாள்”. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் ராம், "பரியேறும் பெருமாள்" இயக்குநர் மாரி செல்வராஜ், இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், நடிகர் கதிர், நடிகை கயல் ஆனந்தி, நகைச்சுவை நடிகர் யோகிபாபு, லிஜீஸ், ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர், எடிட்டர் செல்வா ஆர்.கே., கலை இயக்குநர் ராமு, சண்டைப் பயிற்சியாளர் ஸ்டன்னர் சாம், உள்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இயக்குநர் ராம் பேசுகையில், "எனக்கு ஒரு கவிதையில் நான் வாசித்த காட்சி ஞாபகம் வருது. ஒரு தனித்த பனிச்சாலை. ஒரு ஆளற்ற சாலையில் நீள அங்கி போட்ட ஒரு மனிதர் வருகிறார். அவரின் கையில் ஒரு காயப்பட்ட பறவை இருக்கிறது. இரவும் பகலும் அது அழுதுகொண்டே இருக்கிறது. அந்தக் காயப்பட்ட பறவை ஒரு குழந்தையைப் போல இருக்கிறது. அந்த நீள அங்கிப்போட்ட மனிதர் த...
காலா நிகழ்த்தும் வண்ணக்கோலங்கள்

காலா நிகழ்த்தும் வண்ணக்கோலங்கள்

சினிமா
என்னுடைய அண்மைக்கால கொள்கையில் ஒன்றாக, இயன்றளவு கேளிக்கைக்குக் குறைவாகப் பணம் செலவழிப்பது என்று எண்ணத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறேன். விலையில்லாமலே எவ்வளவோ சிறந்த புத்தகங்களும், நல்ல எழுத்துகளும், தரமான ஆவணப்படங்களும் காணக் கிடைக்கின்ற இக்காலத்தில், ஏனோ நாம் peer pressure-இல் அதிக பணம் செலவழித்து, புதிய படங்களைப் பார்க்க ஓடுகிறோம். அதுவும் ரஜினிகாந்த் போன்ற செல்வாக்கான, பெரும் ஆளுமைகள் நடித்த திரைப்படம் என்றால் நம் ஆவல் கட்டுக்கடங்காமல் பெருகி விடுகிறது. தற்போது வெளியாகியிருக்கும் 'காலா' திரைப்படத்தைப் பற்றி நிறைய எதிர்பார்ப்புகள் பெருகி வர, திரைப்படத்தின் இயக்குநர் பா. ரஞ்சித்தின் பேட்டிகளும், முந்தைய படங்களும் முக்கிய காரணமாக அமைந்துவிட்டது. 'நான் திரைப்படம் எடுக்க வந்திருப்பதே, நான் நம்பும் கருத்தியலை, பொதுமக்களுக்கான வெளியில் பேசுவதற்காகத்தான்' என்று தெளிவாகக் குறிப்பிடுகிறார். இதுத...