Shadow

Tag: இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி

சத்யா விமர்சனம்

சத்யா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
1988 இல் வந்த கமல் படத்திற்கும், இப்படத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை; படத்தின் நாயகன் பெயர் சத்யா என்பதைத் தவிர்த்து. தெலுங்குத் திரையுலகில், 2016இன் தொடக்கத்தில் வெளிவந்த 'க்ஷணம்' என்ற வெற்றிப்படத்தின் தமிழ் ரீமேக்கே இந்த "சத்யா" படம். ஆஸ்திரேலியாவில் பணி புரியும் சத்யாவிற்குத் தன் முன்னாள் காதலியான ஸ்வேதாவிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வருகிறது. அவளைப் பார்க்கச் சென்னை செல்றான் சத்யா. தன் மகளைக் காணவில்லை என்றும், தேடித் தரும்படியும் சத்யாவைக் கேட்கிறாள் ஸ்வேதா. அப்படியொரு மகளே ஸ்வேதாவிற்கு இல்லையெனக் காவல்துறையினரும், ஸ்வேதாவின் கணவனும் திட்டவிட்டமாகச் சொல்லிவிட, அடுத்து என்னாகிறது என்பதுதான் படத்தின் த்ரில்லிங் கதை. சதீஷைக் காமெடியனாக ஏற்றுக் கொள்வதிலேயே மனத்தடை விலகாத பட்சத்தில், அவரைச் சீரியசான பாத்திரத்தில் நடித்திருப்பதை உள்வாங்கிக் கொள்ள சிரமமாய் உள்ளது. ஆனால், தலையும் புர...
சைத்தான் விமர்சனம்

சைத்தான் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
நல்ல கதைகளைத் தேர்ந்தெடுப்பது தான் வெற்றியின் ரகசியம் என்பதில் நம்பிக்கை உள்ளவர் விஜய் ஆண்டனி. அதிலும், சுஜாதாவின் “ஆ” நாவலைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது என்ற செய்தி மேலும் எதிர்பார்ப்பை அதிகமாக்கியது. அதிலும் எண்ணெய் ஊற்றுவது போல், 10 நிமிட படத்தையும் யூ-ட்யூபில் போட்டு மாஸ் காட்டினார் விஜய் ஆண்டனி. விஜய் ஆண்டனிக்கு காதில் குரல்கள் கேட்கின்றன. தற்கொலை செய்து கொள்ளும்படியும், ஜெயலட்சுமியைக் கொல்லும்படியாகவும் கட்டளை இடுகிறது அக்குரல். இருந்தாற்போல் திடீரென அக்குரல்கள் கேட்கக் காரணம் என்னவென்றும், அது அவரது பூர்வஜென்மத்தைக் கிளறி எப்படி அலைக்கழிக்கிறது என்பதும்தான் படத்தின் கதை. குரல்கள் கேட்பதை ‘ஆ’ நாவலிலிருந்தும், அதற்கான காரணத்தை ‘லூசி’ படத்திலிருந்தும் தழுவி சைத்தானை உருவாக்கியுள்ளார் இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி. சுஜாதாவின் ‘ஆ’ நாவலினின்று, மிகக் கச்சிதமான முதல் பாதியைத் தந்துள்...