கதிர், சூரி கலந்த சர்பத்
7 ஸ்கிரீன் ஸ்டியோஸ் லலித்குமார், வயாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனத்தோடு இணைந்து தயாரிக்கும் 'சர்பத்'. அறிமுக இயக்குநர் பிரபாகரன் இயக்கத்தில், 'சர்பத்' படத்தின் நாயகனாகப் பரியேறும் பெருமாள் புகழ் கதிர் நடிக்கிறார். அவரோடு முதல்முறையாக சூரி இணைந்து நடிக்கிறார். கதாநாயகியாக ரகசியா அறிமுகமாகிறார். முக்கிய கதாபாத்திரங்களில் விவேக் பிரசன்னா, சித்தார்த் விபின், மாரிமுத்து ஆகியோர் நடிக்கிறார்கள்.
நம் போக்கில் கதையை வளைக்காமல் கதை போகும் வழியில் திரைக்கதையை அமைத்து, பக்கா ஃபேமிலி என்டெர்டெயின்மென்ட் படமாக இப்படத்தை உருவாக்கி வருகிறார் இயக்குநர் பிரபாகரன். டெக்னிக்கல் டீமில் கேமிரா மேனாக இயக்குநரின் பெயரைக் கொண்ட பிரபாகரன் என்பவர் இணைந்து இருக்கிறார். படத்தொகுப்பாளராக பிரசன்னா ஜி கே இருக்கிறார். இசையமைப்பாளராக சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னர் அஜிஸ் இருக்கிறார். தரமணி, பேரன்பு உ...