
விடுதலை பாகம் 2 – 25 ஆவது நாள் நிறைவு | RS Infotainment
விடுதலை பாகம் 2 வெற்றிகரமாக 25 நாட்கள் கடந்து திரையரங்குகளில் ஓடுவதால், அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஆர்.எஸ். இன்போடைன்மெண்ட் மகிழ்ச்சியில் உள்ளது. “விடுதலை’’யின் ஆழமான திரைக்கதை, எளிய மக்களின் வாழ்க்கை முறையையும், அரசியல் களத்தின் எதார்த்தத்தையும் தைரியமாகச் சித்தரித்துள்ளது. விடுதலை பாகம் 1, பாகம் 2 ஆகிய இரண்டிற்கும் பரவலான வரவேற்பும், உணர்வுப்பூர்வமான ஆதரவும் மக்களிடையே கிடைத்துள்ளதில் ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் பெருமிதமாக உணர்கிறது.“விடுதலை பாகம் 2 மிகவும் லாபகரமான படமாக எங்கள் நிறுவனத்திற்கு அமைந்ததில், நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் மற்றும் சிந்தனையைத் தூண்டும் சினிமாவாக விடுதலை பாகம் 1 & 2 வழங்கியதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். இது எங்கள் நிறுவனத்தில் மீண்டும் ஒரு வெற்றிகரமான மைல்கல்.
இந்த மகிழ்ச்சியான தருணத்தில், இயக்குநர் வெற்றி மாறன் அ...