
ஆஹா தமிழில் ஜீ.வி.பிரகாஷின் ‘ஐங்கரன்’
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அழகப்பா காலேஜ் ஆப் டெக்னாலஜி கல்லூரியின் கலைவிழா (கல்ச்சுரல்ஸ்) சம்பிரதா என்ற பெயரில் மூன்று நாட்கள் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதன் நிறைவு விழாவில் பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான ஜீ.வி.பிரகாஷ் குமார் கலந்து கொண்டார். ஆஹா தமிழ் ஓடிடியில் வெளியான செல்ஃபி படத்தின் ட்ரெய்லர் திரையிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, மே இறுதியில் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள ஐங்கரன் படத்தின் ட்ரெய்லரும் மாணவ மாணவிகள் மத்தியில் திரையிடப்பட்டது. இப்படம், மே 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
அதனைத் தொடர்ந்து மேடையேறிய இசையமைப்பாளரும் நடிகருமான ஜீ.வி. பிரகாஷ் குமார் மாணவர்கள் மத்தியில் பேசினார். அவர், “உங்களின் இந்த உற்சாகத்தைப் பார்க்கும்போது எனக்கும் சந்தோஷம் ஏற்படுகிறது. உங்களுடைய எனர்ஜி என்னை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில் உள்ளது. நான் திரைத்துறைக்கு...