Shadow

Tag: இயக்குநர் மீரா கதிரவன்

இயக்குநர் விஜயசேகரனின் எவனும் புத்தனில்லை

இயக்குநர் விஜயசேகரனின் எவனும் புத்தனில்லை

சினிமா, திரைச் செய்தி
வி சினிமா க்ளோபல் நெட்வொர்க்ஸ் வழங்கும் படம் 'எவனும் புத்தனில்லை'. விஜயசேகரன் இயக்கியுள்ள இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா, சென்னை கமலா திரையரங்கில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. "எவனும் புத்தனாக முடியாது. ஆனால் எல்லாரும் மனுசனாக முடியாது. இங்கு சிறிய படம் பெரிய படம் என்றில்லை. எல்லோரும் ஒரே போல் தான் உழைக்கிறோம். ஆனால் எல்லாப்படங்களுக்கும் தியேட்டர் கிடைக்குதா என்றால் இல்லை. மற்ற மாநிலங்களில் சினிமா மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறது. நம் இண்டஸ்ட்ரி மிகவும் சிக்கலாக இருக்கிறது" என்றார் இயக்குநர் மீரா கதிரவன். இசையமைப்பாளர் மரியா மனோகர், " 'எவனும் புத்தனில்லை' என்ற தலைப்பே எல்லோரையும் ஈர்க்கக்கூடியது. எல்லோருமே அயோக்கியர்கள் தான். ஏன்னா எல்லோராலும் நல்லவனா இருக்க முடியாது. காலத்தின் கட்டாயத்தால் தான் அப்படி மாறுகிறோம். அதனாலே எவனும் புத்தனில்லை என்ற டைட்டில் மிகவும் பிடித்தத...
விழித்திரு விமர்சனம்

விழித்திரு விமர்சனம்

இசை விமர்சனம், சினிமா
'ஓர் இரவில் நான்கு கதைகள்' என்பதுதான் படத்தின் உபத்தலைப்பே! திருநெல்வேலிக்கு ஊர் திரும்ப வேண்டிய ஒருவனின் பர்ஸ் சென்னையில் பிக்பாக்கெட் அடிக்கப்படுகிறது. அன்றிரவு அவனுக்கு என்னென்னவெல்லாம் நிகழ்கிறது என்பதுதான் படத்தின் கதை. விதார்த், வெங்கட் பிரபு, ராகுல் பாஸ்கரன் எனப் படத்தில் மூன்று பிரதான கதாபாத்திரங்கள் இருந்தாலும், கிருஷ்ணா தான் படத்தின் நாயகன். பர்ஸைக் கிருஷ்ணா தொலைப்பதில் இருந்தே கதை தொடங்குகிறது. அவரது படபடவென்ற மேனரிசத்துக்கு ஏற்ற பாத்திரம். திருடன் சந்திர பாபுவாக விதார்த். திருடி சரோஜா தேவியாக சாய் தன்ஷிகா. இருவரது அறிமுகமும், ஒருவரை ஒருவர் ஏய்க்கப் பார்க்கும் காட்சிகளும் ரசிக்க வைக்கின்றன. வெடுக் வெடுக்கெனப் பேசும் கதாபாத்திரத்தில் சாய் தன்ஷிகா அசத்தியுள்ளார். ஆனால், இத்தகைய சீரியசான படத்துக்கு தம்பி ராமையாவின் அசட்டு நகைச்சுவையும், விஜய டி.ராஜேந்தரின். குத்துப் பாட்டும் அவச...
விழித்திரு – புத்தாண்டுக் கொண்டாட்டப் பாடல்

விழித்திரு – புத்தாண்டுக் கொண்டாட்டப் பாடல்

சினிமா, திரைத் துளி
இடம், பொருள், ஏவல் ஆகிய மூன்றும் தான் ஒரு செயலில் வெற்றி பெறுவதற்கு, அதுவும் திரையுலகில் நிலையான வெற்றி பெறுவதற்கு முக்கியமான சிறப்பம்சங்களாக கருதப்படுகிறது.....அத்தகைய சிறப்பம்சங்களை பின்பற்றி வரும் இயக்குநர் - தயாரிப்பாளர் மீரா கதிரவன், விரைவில் வெளியாக இருக்கும் தன்னுடைய 'விழித்திரு' படத்தின் 'STAY AWAKE' பாடலை துபாயில் மிக பிரம்மாண்டமாக வெளியிட முடிவு செய்திருக்கிறார். "என்னைப் பொறுத்தவரை நேரம் தான் இந்த உலகத்தில் எல்லாமுமாக இருக்கின்றது. வருகின்ற நவம்பர் 25 ஆம் தேதி, திரையுலகின் மூத்த நபர் அபிராமி ராமநாதன் அவர்கள் துபாயில் 'நட்சத்திர கலை விழா' என்னும் விமர்சையான கலை நிகழ்ச்சியை நடத்த இருக்கிறார். ஒட்டுமொத்த துபாயும் அன்றிரவு நட்சத்திரங்களின் வருகையால் 'விழித்திரு' க்கும். அப்படி ஒரு பிரம்மாண்டமான நிகழ்ச்சியில் எங்களின் 'விழித்திரு’ பாடலை வெளியிட வேண்டும் என்று தான் நான் பல நாட்கள் யோ...