Shadow

Tag: இயக்குநர் முத்துக்குமரன்

தர்மபிரபு விமர்சினம்

தர்மபிரபு விமர்சினம்

சினிமா, திரை விமர்சனம்
  வாரிசு என்ற அடிப்படையில் தர்மராஜாவின் மகனான தர்மபிரபு, எமன் பதவிக்கு வருகிறார். ஒரு சிறுமியின் உயிரைக் காப்பாற்றப் போக, அவளோடு சேர்த்து ஒரு சாதி கட்சித் தலைவரையும் காப்பாற்றி விடுகிறார் எமன். அரக்கனான அந்தத் தலைவரை ஏழு நாளுக்குள் கொல்லவில்லை எனில் எமலோகத்தைக் கொளுத்தி விடுவேன் என சிவன் சொல்லிவிட, தர்மபிரபு எப்படி அந்த சாதிக்கட்சித் தலைவரின் உயிரை எடுக்கிறார் என்பதுதான் படத்தின் கதை. இயக்குநர் முத்துக்குமரன் தன்னை ஒரு தீவிர பெரியாரிஸ்ட் எனச் சொல்லிக் கொள்கிறார். நீதியின் காவலனான தர்மபிரபு, எமக்கோட்டைக்கு ஓர் இக்கட்டான சூழல் நேரும் பொழுது, பெரியார், அம்பேத்கர், நேதாஜி, காந்தி ஆகியோரைக் கூப்பிட்டு யோசனை கேட்கிறார். பெளத்தரான அம்பேத்கரும், நாத்திகவாதியான பெரியாரும், அவர்களின் வாழ்நாள் முழுவதும் பேசிய அரசியல் அனைத்தும் மிகப் பெரிய காமெடி என நிறுவப்படுகிறது. நால்வரும் தாங்கள் வரித்துக் ...