காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் விமர்சனம்
“என் படத்துல, ஒண்ணு, நாயகன் கத்திப் பேசணும். இல்லன்னா, கத்தியால பேசணும்.”
- இயக்குநர் முத்தையா
நீதி, நேர்மை, நியாயம். அதற்காக அடி, வெட்டு, குத்து என களத்தில் இறங்கி வெளுக்கிறார் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம். நீதி, நேர்மைக்காக அடிக்கிறார் எனப் பார்த்தால், ரிஷி ரித்விக்கை அடித்துவிட்டு அவரது கூலிங் கிளாஸை எடுத்துக் கொள்கிறார். ‘என்னய்யா உன் நியாயம்?’ என யோசித்தால், ‘என்னை அடிச்சுட்டான்’ என ரிஷி ரித்விக்கும் அவரது அப்பாவை மறுபடியும் சண்டைக்கு அழைத்து வருகிறார். 'என்னங்கடா இது சின்னப்புள்ளத்தனமா இருக்கே!' என பார்வையாளர்கள் நெற்றியைச் சுருக்க, காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கமோ அவரையும் சீரியசாகப் போட்டு வெளுக்கிறார். அவர் ஃப்ரேமில் சண்டை செய்து கொண்டேயிருக்க, படத்தில் மூன்று மூத்த வில்லன்கள், அவர்களது வாரிசுகளாக ஏழு இளைய வில்லன்கள்.
தமிழ்ச்செல்விக்கு 100 ஏக்கர் நிலமும், 6 பெரிய வீடு...