Shadow

Tag: இயக்குநர் முனுசாமி

ரீல் விமர்சனம்

ரீல் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மற்றவரை ஏமாற்றி ஏய்த்துப் பிழைக்கும் நாயகனுக்கும், குடும்பச் சூழல் காரணமாய் சோரம் போகும் நாயகிக்கும் காதல் மலர்கிறது. கூடவே எதிரிகளும் உருவாகிறார்கள். நாயகனும் நாயகியும் வாழ்க்கையில் ஒன்றிணைந்தார்களா என்பதுதான் படத்தின் கதை. அரத பழசான கதை. அதனினும் தொன்மையான திரைக்கதை பாணி. மாறி வரும் கதை சொல்லல் முறையையோ, திரைப்பட வடிவத்தையோ, கொஞ்சம் கூடக் கணக்கில் எடுக்கவில்லை எழுத்தாளர் TN சூரஜ். கதையின் ஊடே கதாபாத்திரங்களை அறிமுகம் செய்யாமல், அறிமுகப் படமெனத் தனியாக நீள்கிறது. அதுவும் 80 களின் சினிமா எப்படித் தொடங்குமோ அப்படி! பெண்களை அடைய நினைக்கும் வயதான பணக்கார வில்லன். அவருக்கு வேற எந்த ஷேடும் இல்லை. அறிமுகமாகும் நொடியில் இருந்து பெண்களை வெறிக்க வெறிக்கப் பார்ப்பதும், நாயகியை அடையவேண்டும் என தன் விருப்பத்தை அருவருப்பான முறையில் வெளிப்படுத்துவதுமான அவரது கதாபாத்திரம். கிரீஷ் எனும் அந்தப் பாத்திரத்...
‘ரீல்’ – காதல் படம்

‘ரீல்’ – காதல் படம்

சினிமா, திரைத் துளி
கதையில் இருக்கும் கதாபாத்திரங்களும், அதன் வார்ப்புமே ஒரு ரொமான்டிக் படத்தின் தரத்தைத் தீர்மானிக்கிறது. கதாபாத்திரங்களின் வலிமையை உணர்த்தும் திரைப்படங்களைத் தமிழ் சினிமா நிறையக் கண்டுள்ளது. இத்தகைய காதல் திரைப்படங்களை நிலையாக கொடுத்துவரும் தமிழ் சினிமாவின் வரிசையில் , நம்பிக்கையோடு சேரத் தயாராகயிருக்கிறது "ரீல்". "காதல் திரைப்படங்கள் ரசிகர்களுக்குப் புதியவை இல்லையென்றாலும், அதன் வடிவமைப்பே அவற்றைத் தனித்துக் காட்டுகிறது. இப்படத்தின் தலைப்பான "ரீல்" என்பது எதற்காக என்று கேள்விக்குப் படத்தின் கதையே பதில் கூறும். நடிகர்கள் உதய்ராஜும் அவந்திகாவும் கதாபாத்திரத்தின் வலிமையை உணர்ந்து நடித்து இருக்கிறார்கள். KPY புகழ் சரத் இப்படத்தில் முழு நேர நகைச்சுவை நடிகராக மட்டுமில்லாமல், ஒரு குணச்சித்திர நடிகராகவும் தன் திறமையை வெளிபடுத்தியுள்ளார். படத்தின் இறுதியில் வரும் திருப்பங்களும், கூறப்பட்டிருக்கும்...