Shadow

Tag: இயக்குநர் மு.மாறன்

கண்ணை நம்பாதே – க்ரைம் த்ரில்லர்

கண்ணை நம்பாதே – க்ரைம் த்ரில்லர்

சினிமா, திரைத் துளி
பிப்ரவரி 22ஆம் தேதி, சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியாகும் 'கண்ணே கலைமானே' படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ள நிலையில், உதயநிதி ஸ்டாலினின் புதிய படமான 'கண்ணை நம்பாதே' பிப்ரவரி 4 ஆம் தேதி அன்று சம்பிரதாய எளிய சடங்குகளுடன் துவங்கியது. சஸ்பென்ஸ் க்ரைம் த்ரில்லர் படமான இந்தப் படத்தை "இரவுக்கு ஆயிரம் கண்கள்" படத்தை இயக்கிய மு.மாறன் இயக்குகிறார். V.N. ரஞ்சித் குமார் படத்தைத் தயாரிக்கிறார். இயக்குநர் மு.மாறன் சஸ்பென்ஸ் த்ரில்லர் வகையில் தனது முதல் படமான 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்திலேயே தனது திறமைகளைக் காட்டியிருந்தார். தற்போது அதே வகையில், இந்தப் படத்தில் தற்போது க்ரைம் விஷயங்களையும் சேர்த்திருக்கிறார். "என் முதல் படமான 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' ஆரம்பித்த போது பார்வையாளர்கள் நல்ல கதைகளை ஆதரிப்பார்கள் என்ற குருட்டு நம்பிக்கையில் கதையை எழுதினேன். இருப்பினும், என் எதிர்பார்ப்புகளை மீறி ரசிகர...
சிரிக்கச் செய்வார் ஆனந்த்ராஜ்

சிரிக்கச் செய்வார் ஆனந்த்ராஜ்

சினிமா, திரைத் துளி
அருள்நிதி - மஹிமா நம்பியார் நடிக்கும் திரைப்படம் 'இரவுக்கு ஆயிரம் கண்கள்'. அறிமுக இயக்குநர் மு.மாறன் இயக்கும் இந்தப் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதற்காக நடிகர்கள் அஜ்மலும் ஆனந்தராஜும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். 'ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி' சார்பில் ஜி.டில்லி பாபு தயாரித்து, விஷால் சந்திரசேகர் இசையமைக்கும் இந்த 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தின் படப்பிடிப்பு வருகின்ற மார்ச் 31 ஆம் தேதி அன்று ஆரம்பமாக இருக்கின்றது. "ஆனந்தராஜ் சாரின் கதாபாத்திரம் எங்கள் படத்தின் கதைக்கு மேலும் பலம் சேர்க்கும். அவரின் உடல் பாவனைகளும், வசனங்களும் நிச்சயமாக ரசிகர்களை வாய்விட்டுச் சிரிக்கச் செய்யும். அருள்நிதி சார் - அஜ்மல் - ஆனந்தராஜ் சார் ஆகியோரின் இந்தப் புதிய கூட்டணி, நிச்சயமாக ரசிகர்களின் உள்ளங்களை வெல்லும்" என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தின் இயக்குநர் மு மாறன்....