Shadow

Tag: இயக்குநர் யுவராஜ். D

ஜாஸ்பர் விமர்சனம்

ஜாஸ்பர் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
தமிழில் வந்திருக்கும் முதல் ஹிட்மேன் படமென பட நிறுவனம் விளம்பரப்படுத்தியுள்ளனர். அடிதடி என வாழும் ஜாஸ்பர், போலீஸ்க்கு உதவும் ஒரு ஹிட்மேனாக உருமாறி வேட்டையாடுகிறான். அவன் குடும்பத்தை இழந்ததும் அனைத்தையுன் விட்டுத் தலைமறைவாகி விடுகிறான். ஜாஸ்பர் கிழப்பருவம் எய்தி முதுமையை அடையும் தருவாயில் உள்ள பொழுது, அவனது பக்கத்து வீட்டிலுள்ள இளைஞன் கடத்தப்படுகிறான். அந்த இளைஞனை மீட்க மீண்டும் ஹிட்மேனாக மாறுகிறான் ஜாஸ்பர். குடித்துக் குடித்து தன்னைச் சீரழித்துக் கொள்ளும் ஜாஸ்பரால், பக்கத்து வீட்டு இளைஞனைக் கண்டுபிடித்துக் காப்பாற்ற முடிகிறதா என்பதுதான் படத்தின் கதை. ஹிட்மேனின் அறிமுகம் ஒரு தோப்பில் நிகழ்கிறது. படத்தின் கதைக்களம் மிகவும் பெரியது. ஆனால், படத்தின் பட்ஜெட் காரணமாக எல்லாம் மிக எளிமையாக நிகழ்கின்றன. மிஸ்டர் ஜே எனும் ஹிட்மேன்க்கு அதிசய சக்திகள் உள்ளதாக வதந்தியும் பயமும் மக்களிடையே எழுகிறது. ...
ஜாஸ்பர் – தமிழில் ஒரு ஹிட்மேன்

ஜாஸ்பர் – தமிழில் ஒரு ஹிட்மேன்

Movie Posters, கேலரி, சினிமா, திரைத் துளி
தமிழ் சினிமாவில் ஆக்ஷன் மற்றும் த்ரில்லர் திரைப்படங்களின் எண்ணிக்கைகள் அதிகம். ஆனால், ஹிட்மேன் கதாபாத்திரத்தை மையமாக வைத்து ஆக்ஷன் நிறைந்த த்ரில்லர் படங்களின் எண்ணிக்கைகள் மிகவும் குறைவு. அதை பூர்த்தி செய்யும் விதமாக விஸ்வரூபி பிலிம் கார்ப்பரேஷன் தயாரித்து, அறிமுக இயக்குநர் யுவராஜ்.D இயக்கத்தில் விரைவில் திரைக்கு வரவுள்ளது ஜாஸ்பர் திரைப்படம். முழுக்க முழுக்க ஆக்ஷன், சண்டைக்காட்சிகள் நிறைந்த படமாக மட்டுமில்லாமல் ஐஸ்வர்யா தத்தா மற்றும் விவேக்கின் மென்மையான காதல் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. பிரபல இசைக்கலைஞர் ட்ரம்ஸ் சிவமணியின் மகன் குமரன் சிவமணி இசையமைத்துள்ளார், பாடகர்கள் பிரதீப் குமாரும், சைந்தவியும் தங்கள் இனிமையான குரலில் பாட, அற்புதமான பாடல் காட்சிகளும் உருவாகியிருக்கிறது. இத்திரைப்படத்தில் விவேக் ராஜகோபால், ஐஸ்வர்யா தத்தா, சி.எம். பாலா, ராஜ் கலேஷ், லாவண்யா, பிரசாந்த் முரளி, கோட்டையம...