Shadow

Tag: இயக்குநர் ரஞ்சித்

பரியேறும் பெருமாள்: எங்கள் வீட்டு நிலவு

பரியேறும் பெருமாள்: எங்கள் வீட்டு நிலவு

சினிமா, திரைச் செய்தி
தமிழ் மக்களின் மனமேறி சிம்மாசனம் போட்டு அமர்ந்து விட்டான் “பரியேறும் பெருமாள். உலகெங்கும் வெற்றிநடை போட்டு வரும் இப்படத்தின் வெற்றிக்கு அடித்தளமிட்டது படத்தில் பதிவு செய்யப்பட்ட நிஜமும் நம் மக்களின் மனசாட்சியின் வடிவமான காட்சிகளும் தான். சமத்துவத்தையும் பேரன்பையும் அழுத்தமாகப் பதிவு செய்த இப்படத்திற்கு மக்கள் அளித்த மகத்தான ஆதரவிற்கு நன்றி தெரிவிக்கும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. படத்தின் தயாரிப்பாளர் பா.ரஞ்சித் பேசும்போது,“இது கொண்டாட்டமான மனநிலை. பரியேறும் பெருமாள் போன்ற படங்கள் ஓடாது என்று பலரும் பயம் காட்டினார்கள். ஆனால் எனக்கு நம்பிக்கை இருந்தது. மனித மாண்பை மீட்டு எடுக்கிற சாதிய முரண்களை உடைத்து எடுக்கிற படங்களை நிச்சயமாகக் கொண்டாடுவார்கள் என்று நம்பினேன். அது நடந்தது. அம்பேத்கர் புகைப்படத்தை, படத்தில் காட்டினாலே மதுரையில் கலவரம் நடக்கும் என்று பலரும் சொன்னார்கள்...
காலா விமர்சனம்

காலா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மும்பையின் மத்தியில் இருக்கும் தாராவி எனும் சேரிப்பகுதி கரிகாலனின் கோட்டையாக விளங்குகிறது. அதைத் தரைமட்டமாகிக் கட்டடங்களாக்குவது தான் அரசியல்வாதி ஹரி தாதாவின் 'ப்யூர் மும்பை' திட்டத்தின் நோக்கம். சாமானிய மக்களின் பாதுகாவலனாக விளங்கும் காலாவிற்கும், மும்பையின் மொத்த அதிகாரத்தையும் கைக்குள் கொண்டுள்ள ஹரி தாதாவிற்கும் நடக்கும் போர் தான் 'காலா'. ஆம், படத்தின் இடைவேளையின் பொழுது போர் தொடங்குகிறது. தாராவியின் சிஸ்டம் ஸ்தம்பிக்கிறது. காலா, மக்களை ஒருங்கிணைத்து உள்ளிருப்புப் போராட்டம் நடத்துகின்றார். அதில் சமூக விரோதிகள் என்ட்டரியாகி விடுகின்றனர். மக்கள் போராட்டத்தைப் போலீஸார் அடாவடியாகக் கலைக்கின்றனர். கருப்பு மலர்கிறது. சுபம். பில்டப் அளவிற்கு, காலா பாத்திரத்தை வலுவானதாய்ச் சித்தரிக்காததோடு, பில்டப்பே இன்றி ஹரி தாதா பாத்திரத்தை மிக அழகாகச் செதுக்கியுள்ளார் ரஞ்சித். ஹரி தாதாவாய் நானா படேகர் பிர...