Mr. லோக்கல் விமர்சனம்
நயன்தாரா, சிவகார்த்திகேயன், யோகி பாபு, ரோபோ ஷங்கர், சதீஷ், தம்பி ராமையா, ராதிகா சரத்குமார் என முன்னணி நடிகர்கள் பட்டாளத்தை தன் படத்துக்குள் கொண்டு வந்துவிட்டார் இயக்குநர் ராஜேஷ். ஆனால் படத்திற்கு அத்தியாவசியமான கதையும் திரைக்கதையும் மட்டும், சென்னையின் நீர்ப்பஞ்சத்திற்கு நிகராய் வறண்டு போயுள்ளன.
ராஜேஷ் படத்தில் கதையா முக்கியம்? நிச்சயமாக இல்லை தான். ஜாலியான வசனங்கள், தட்டுத்தடுமாறி நாயகியின் கடைக்கண் பார்வையைப் பெறத் துடிக்கும் நாயகனின் அலம்பல்கள், சின்னதாய் ஒரு ஃபேமிலி சென்ட்டிமென்ட் என தனது முதல் படத்தில் இருந்தே ஒரே ஃபார்மட்டை விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டுள்ளார். முதல் மூன்று படங்களில், அதைச் சுவாரசியமாகக் கொடுத்தவர், அதன் பின் ரொம்பவே தடுமாறத் தொடங்கிவிட்டார். அதன் உச்சமாக அமைந்துள்ளது மிஸ்டர் லோக்கல் திரைப்படம்.
விமானத்தில் ஜன்னலோர சீட் தராத ஃப்ரெஞ்சு பெண்மணியைப் பார்த்து...