Shadow

Tag: இயக்குநர் ராதாமோகன்

சட்னி சாம்பார் | இயக்குநர் ராதாமோகனின் 20 ஆம் ஆண்டு

சட்னி சாம்பார் | இயக்குநர் ராதாமோகனின் 20 ஆம் ஆண்டு

OTT, Web Series
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வழங்க, வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில், இயக்குநர் ராதா மோகனின் இயக்கத்தில், அதிரடியான நகைச்சுவை சரவெடி வகைமையில் உருவாகியுள்ள சீரிஸ், 'சட்னி சாம்பார்'. நடிகர் யோகி பாபுவின் முதல் முழுநீள வெப் சீரிஸாக உருவாகியுள்ள, இந்த சீரிஸ், ஜூலை 26 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீமாகத் தொடங்கியுள்ளது. வேல்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் முதல் வெப் சீரிஸ் இது. அஜீஸ் அசோக் இசையமைத்துள்ள மூன்றாவது வெப்சீரிஸ் இது. அவரது இசையில், ஹாட்ஸ்டாரில் வெளியாகும் இரண்டாவது வெப் சீரிஸ் இது. நடிகர் இளங்கோ குமரவேல், "இயக்குநர் ராதா மோகன் திரைக்கு வந்து 20 வருடங்கள் கடந்திருக்கிறது. அவரது முதல் படத்திலும் நான் இருந்தேன். அவரது முதல் சீரிஸிலும் இருக்கிறேன். மகிழ்ச்சி. ஆர்ட் டைரக்டர் கதிர், ரைட்டர் பொன் பார்த்திபன் என நண்பர்கள் அனைவரும் அவரோடு இத்தனை வருடம் இணைந்து பயணித்து வருகிறோம். அன்று எப்படி எனர்ஜியோடு ...
சட்னி சாம்பார் – யோகிபாபு நடிக்கும் முதல் வெப் சீரிஸ்

சட்னி சாம்பார் – யோகிபாபு நடிக்கும் முதல் வெப் சீரிஸ்

OTT, Web Series
இயக்குநர் ராதாமோகனின் இயக்கத்தில், 'சட்னி - சாம்பார்' சீரிஸை, ஜூலை 26 முதல் ஸ்ட்ரீமிங் செய்யவுள்ளது டிஸ்னி+ ஹாட்ஸ்டார். இந்நிலையில் தற்போது இந்த சீரிஸின் சாராம்சத்தை படம்பிடித்து காட்டும் வகையில், ஒரு பெப்பி ராப் பாடலை வெளியிட்டுள்ளது.  இந்த பெப்பி ராப் பாடல், உணவைத் தயாரிக்கும் சமையல்காரர்களுக்கு இடையேயான போரையும், உணவுகளுக்கு இடையிலான நிலைப்பாட்டையும் காட்டுகிறது. இந்த ராப் பாடல் வரிகளை ராகுல் ஸ்ரீதர் (ஹிப்பி எழுத்தாளர்) எழுதியுள்ளார். நடிகர் யோகி பாபு முதல் முறையாக ஒரு முழு நீள வெப் தொடரில் கதாநாயகனாக நடிக்கிறார். ஆதலால் இந்த வெப் சீரிஸ் ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமான ராதாமோகன் பாணியில் சிரிப்பு சரவெடி நிறைந்த ஒரு அழுத்தமான பொழுதுபோக்கு குடும்ப சித்திரமாக இந்த சீரிஸ் உருவாகியுள்ளது. 'சட்னி - சாம்பார்' சீரிஸை அறிமுகப்படு...
சட்னி சாம்பார் – இயக்குநர் ராதாமோகனின் வெப் சீரிஸ்

சட்னி சாம்பார் – இயக்குநர் ராதாமோகனின் வெப் சீரிஸ்

OTT, Web Series, திரைத் துளி
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது அடுத்த ஒரிஜினல் சீரிஸாக, பிரபல இயக்குநர் ராதாமோகன் இயக்கத்தில், "சட்னி சாம்பார்" சீரிஸை அறிவித்துள்ளது. இந்த சீரிஸ் பூஜையுடன் ஜூலை 15 அன்று துவங்கியது. வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பை மேற்கொள்கிறது. யோகிபாபு முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் இந்த ஒரிஜினல் சீரிஸ் அனைத்து ரசிகர்களுக்கும் விருந்தாக அமையும். இயக்குநர் ராதாமோகன், "சட்னி சாம்பார்' சீரிஸின் படப்பிடிப்பை, அட்டகாசமான குழுவுடன் இணைந்து, மகிழ்ச்சியுடன் துவங்கியிருக்கிறோம். இது முழுக்க முழுக்கக் காமெடியாக அனைவரும் ரசிக்கும்படியான படைப்பாக இருக்கும். யோகி பாபு மற்றும் வாணி போஜன் மட்டுமில்லாமல், இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் சீரிஸில் 'கயல்' சந்திரமௌலி, நிதின் சத்யா, சார்லி மற்றும் குமரவேல் உட்பட பல முக்கிய நட்சத்திரங்களும் நடிக்கிறார்கள்" என்றார். நடிகர் யோகிபாபு, "சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவர...
பொம்மை விமர்சனம்

பொம்மை விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
Mannequin (1987) என்ற ஆங்கிலப்படத்தின் அதிகாரபூர்வமற்ற தழுவலே ராதாமோகன் இயக்கத்தில் எஸ்.ஜே சூர்யா நடிப்பில் வெளியான பொம்மை. ஒரு நிறுவனத்தில் பொம்மை செய்யும் கலைஞராக வேலை செய்கிறார் எஸ்.ஜே. சூர்யா. அவர் வடித்தெடுக்கும் பொம்மையில் தன் காதலி பிரியா பவானி சங்கரைப் பார்க்கிறார். அந்தப் பொம்மை உயிர் பெற்று வந்து எஸ்.ஜே. சூர்யாவிடம் பேசுகிறது. தன்னை வீட்டுக்கு அழைத்துப் போகச் சொல்கிறது. ஒரு கட்டத்தில் அந்தப் பொம்மைக்காகக் கொலையும் செய்கிறார். அந்தக் கொலைக்கான விசாரணை ஒருபுறம் நடக்க, பொம்மையைத் தன்னோடு வைத்துக் கொள்ள எஸ்.ஜே. சூர்யா போராட, எப்படியான முடிவு அமைந்தது என்பதே படத்தின் கதை. எஸ்.ஜே. சூர்யா நல்ல நடிகர் என்பதைப் பல படங்களில் நிறுவியிருக்கிறார். அதே போல் கொஞ்சம் ஓவராக நடிப்பார் என்பதையும் சில படங்களில் நிறுவியிருக்கிறார். அந்தச் சில படங்களில் ஒன்றாக இந்தப் படமும் அமைந்தது ரசிகனின் துரதி...
காற்றின் மொழி விமர்சனம்

காற்றின் மொழி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
'தும்ஹாரி சுலு' எனும் ஹிந்திப் படத்தின் மறு உருவாக்கமாக வந்துள்ளது 'காற்றின் மொழி' திரைப்படம். சுலோச்சனாவாக நடித்த வித்யாபாலனின் பாத்திரத்தில் விஜயலக்‌ஷ்மியாக ஜோதிகா நடித்துள்ளார். நாயகியை மையப்படுத்திய படமாக ஜோதிகா தேர்ந்தெடுத்து நடிப்பது சிறப்பு. ஒரே மாதிரியான அம்சம் பொருந்திய கதைகளிலேயே உழலாமல், ஜோதிகாவைப் போல், முன்னணி நாயகர்களும் படத்தைத் தேர்ந்தெடுத்தால் எப்படியிருக்கும்? பன்னிரெண்டாம் வகுப்பு தேறாத விஜியலக்‌ஷ்மிக்கு எதிர்பாராத விதமாக ஹலோ எஃப்.எம்.-இல் ஆர்ஜே-வாக (RJ - Radio Jockey) வேலை கிடைக்கிறது. அதனால் அவர் குடும்பத்தில் என்ன சிக்கல்கள் எழுகிறது என்றும், அதை அவர் எப்படி எதிர்கொள்கிறார் என்பதும்தான் படத்தின் கதை. ராதாமோகனின் ஆஸ்தான நடிகர்களான எம்.எஸ்.பாஸ்கரும், குமரவேலும் படத்தில் உள்ளனர். மொழி படத்தினைப் போலவே எம்.எஸ்.பாஸ்கருக்கு ஓர் அழுத்தமான பாத்திரம். மூலக்கதையில், ஒரு காட...
60 வயது மாநிறம் விமர்சனம்

60 வயது மாநிறம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
'கோதி பண்ணா சாதார்ணா மைக்கட்டு (Godhi Banana Sadharna Mykattu)' என்ற படம் கன்னடத்தில், 2016 இல் வெளிவந்தது. 'கோதுமை நிறம் சாதாரண உடற்கட்டு' என்பது அந்தக் கன்னடப்படத் தலைப்பின் பொருள். இயக்குநர் ராதாமோகன், '60 வயது மாநிறம்' எனத் தமிழில் மீள் உருவாக்கம் செய்துள்ளார். அல்சைமர் நோயால் பாதிக்கப்படும் 60 வயது கோவிந்தராஜ் காணாமல் போய்விடுகிறார். அவரையொரு பராமரிப்பு இல்லத்தில் சேர்த்துவிட்டிருக்கும் அவரது மகன் சிவா, தனது அலட்சியத்தால் தந்தையைத் தொலைத்துவிட்டோமெனத் தேடி அலைகிறான். சிவாவின் தந்தை எங்குப் போனார், எப்படிக் கிடைத்தார் என்பதுதான் படத்தின் கதை. ராதாமோகன் மீண்டும் ஒருமுறை தன் மேஜிக்கை நிகழ்த்திக் காட்டியுள்ளார். ராதாமோகனின் ஆஸ்தான நடிகரான குமரவேல் அறிமுகமான நொடி முதல் படம் கலகலப்பாகிறது. கொலைக்காரர்களான சமுத்திரக்கனியிடமும், அவரது அசிஸ்டென்ட்டிடமும் மாட்டிக் கொள்ளும் குமரவேலின் கவுன்ட...
பிருந்தாவனம் விமர்சனம்

பிருந்தாவனம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
இயக்குநர் ராதாமோகனிடமிருந்து மீண்டுமொரு ஃபீல் குட் படம். கேட்க முடியாததாலும், பேச முடியாததாலும், தனிமையைக் குறித்த இருப்பியல் சார்ந்த அகப் பிரச்சனையில் உழல்கிறார் அருள்நிதி. அதிலிருந்து அவரது ஆதர்சமான நகைச்சுவை நடிகர் விவேக், அருள்நிதியை எப்படி மீட்கிறார் என்பதே படத்தின் கதை. படத்தில் நகைச்சுவை நடிகர் விவேக்காகவே தோன்றிக் குணச்சித்திர நடிப்பில் கலக்கியுள்ளது சிறப்பு. சுருக்கமாகச் சொன்னால், பிருந்தாவனம் – ‘விவேக் மயம்’ என்றே கூறவேண்டும். மரண நாளை எண்ணிக் கொண்டிருப்பவர், நான்கு வயது மகனைத் தொலைத்து வாழ்க்கையை இழந்தவர், தனிமையைக் கண்டு மிரண்டு அனுதாபத்தை எதிர்பார்க்கும் இளைஞர், மகனை இழந்து விட்ட துக்கத்தை மறைக்கும் கலைஞர் என படத்தில் வரும் பாத்திரங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு உப கதை உள்ளது சிறப்பு. படத்தின் பலமும் பலவீனமும் கூட அதுவே! கதாபாத்திரங்களுக்கென ஒரு கதை இருப்பது பலம் என்றால், படம்...
உப்பு கருவாடு விமர்சனம்

உப்பு கருவாடு விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சினிமாவைத் தவிர வேறொன்றினை அறியாத சந்திரனுக்கு, படம் இயக்க காசிமேடு தயாரிப்பாளர் ஒருவர் கிடைக்கிறார். பல சிக்கில்களுக்கு மத்தியில், சந்திரனால் அந்தப் படத்தை இயக்க முடிந்ததா இல்லையா என்பது தான் படத்தின் கதை. ராதாமோகனின் ஆஸ்தான நடிகர்களில் ஒருவரான குமரவேல் தான் படத்தின் நாயகன். அவர் பீடி பிடித்துக் கொண்டே முதற்பாதி படத்தில் பட்டும் படாமலும் திரையில் தோன்றினாலும், இரண்டாம் பாதியில் ஒட்டுமொத்த படத்துக்கே தான் தான் நாயகனென கருணாகரனை மிக இலகுவாக முந்தி விடுகிறார். மாஞ்சா என்ற அந்தக் கதாபாத்திரத்தின் பலம், அது பிரதிபலிக்கும் சாமானிய முகமே! சாமானியர்களை சினிமா எவ்வளவு கவர்கிறது என்பதற்கும், சினிமாவில் ஒரு வாய்ப்பு கிடைத்தால் தங்கள் திறமையை வெளிக்காட்டிக் கொள்ள எந்த எல்லைக்குப் போவார்கள் என்பதற்கும் அந்தப் பாத்திரம் ஒரு சான்று. மொழி படத்தில் எம்.எஸ்.பாஸ்கரை குணசித்திர வேடத்தில் நடிக்க வைத்...