Shadow

Tag: இயக்குநர் ராம்பாலா

வந்தான் சுட்டான் ரிப்பிட்டு | இயக்குநர் ராம்பாலா

வந்தான் சுட்டான் ரிப்பிட்டு | இயக்குநர் ராம்பாலா

சினிமா, திரைத் துளி
தரமான கதைகளைத் தேர்ந்தெடுத்துத் தயாரிக்கும் தயாரிப்பாளர் "2 MB" ரகுநாதன் P.S, தற்போது தொடர் வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குநர் ராம்பாலா இயக்கத்தில் "வந்தான் சுட்டான் ரிப்பிட்டு" எனும் புதிய படத்தைத் தயாரிக்கிறார். ஏப்ரல் 7 ஆம் தேத்க் அன்று இப்படத்தின் படப்பிடிப்பு இனிதே துவங்கியது. காமெடி கலந்த திகில் படமாக உருவாகும் "வந்தான் சுட்டான் ரிப்பிட்டு" படத்தில் சந்திரமௌலி நாயகனாக நடிக்கின்றார். மீனாக்‌ஷி கோவிந்தராஜன், ரெபா மோனிகா நாயகிகளாக நடிக்கின்றனர். மனோ பாலா, ஊர்வசி, லிவிங்ஸ்டன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். >> ஒளிப்பதிவு - செவிலோ ராஜா >> இசை - சந்தோஷ் தயாநிதி & K.C.பாலசாரங்கன் >> கலை - கிருஷ்ணா >> படத்தொகுப்பு - K.J.வெங்கட்ரமணன் >> காஸ்ட்யூம் டிசைனர் - சோபியா ஜெனிபர் >> ஒப்பனை - ராஜா >> சண்டை - விக்கி >> ப்ரொடக்‌ஷன் எக்ஸிக்யுடிவ...
தில்லுக்கு துட்டு 2 விமர்சனம்

தில்லுக்கு துட்டு 2 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மாயாவிடம் யாராவது காதலைச் சொன்னால், அவர்களை அவளது தந்தை துர்மந்திரவாதியான கருடராஜா பட்டதாரி ஏவி விட்ட துஷ்ட சக்தி உண்டு இல்லை எனச் செய்துவிடுகிறது. சந்தானம் மாயாவிடம் காதலைச் சொல்ல, அந்தப் பேய் அவரையும் போட்டுப் புரட்டியெடுக்கிறது. சந்தானம் காதலில் எப்படி வெல்கிறார் என்பதுதான் படத்தின் கதை. ஜில்.. ஜங்.. ஜக் படத்தில் பை எனும் பைந்தமிழாகக் காமெடியில் கலக்கியிருக்கும் பிபின், இப்படத்தில் துர்மந்திரவாதி கருடராஜ பட்டாதரியாக வருகிறார். அவர் முதலில் டெரராக அறிமுகமாகி, சந்தானம் அவரைச் சந்தித்த பின் நகைச்சுவைக்கு  மாறுகிறார். தில்லுக்கு துட்டு படத்தில், இரண்டாம் பாதி நகைச்சுவைக்குப் பொறுப்பேற்றிருந்த நான் கடவுள்’ ராஜேந்திரன், இப்படத்தின் சந்தானத்தின் மாமாவாக படம் முழுவதும் வந்தாலும், முதற்பாகம் அளவிற்கு நகைச்சுவைக்கு உதவவில்லை. நாயகியாக, மாயா பாத்திரத்தில் ஸ்ரீதா சிவதாஸ் அறிமுகமாகியுள்ள...
தில்லுக்கு துட்டு விமர்சனம்

தில்லுக்கு துட்டு விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சேட்டு வீட்டுப் பெண்ணான காஜலைக் காதலிக்கிறான் லோக்கல் பையனான குமார். அது பிடிக்காத காஜலின் தந்தை, ஒரு பங்களாவில் வைத்து குமாரைக் கொல்ல நினைக்கிறார். அந்தப் பங்களாவிலோ இரண்டு பேய்கள் உள்ளன. அங்கு நடக்கும் சுவையான சம்பவங்கள்தான் படத்தின் கதை. கொஞ்சம் ரெஸ்ட் கொடுத்தால் தேவலை என நினைக்கும் அளவுக்குச் சலிக்கச் சலிக்க பேய்ப் படத்தை வழங்கி வருகிறது தமிழ்ப் திரையுலகம். ஆச்சரியம் ஏற்படுத்தும் விதமாக சந்தானமும் அந்தக் கோதாவில் குதித்துள்ளார். முருக பக்தன் குமாராக ஆடல் பாடலுடன் அமர்க்களமாய் அறிமுகமாகிறார். குடித்து விட்டு, கருணாசுடன் பேசும் காட்சியில் மட்டும் பழைய சந்தானம் தெரிகிறார். விழுந்து விழுந்து நடனம் புரிவதாகட்டும், மிக ஸ்டைலிஷாகச் சண்டை போடுவதாகட்டும் சந்தானம் புதிய பரிமானத்துக்கு மிகவும் முயன்றுள்ளார். அவற்றை எல்லாம் சோதித்துப் பார்த்து விட்டு, இரண்டாம் பாதியில் தான் பேய் பங்களாவுக்குள் நு...