
பறந்து போ விமர்சனம் | Paranthu Po review
ஓர் இனிய ஆச்சரியம். தென்றல் தீண்டுவது போல் ஒரு ஜாலியான படம். இயக்குநர் ராமின் முந்தைய படங்களினின்று நேரெதிராக உள்ளது இப்படம். ராமின் பிரதான கதாபாத்திரங்கள் பெரும்பாலும், சக மனிதர்கள் மீது கோபமும், அவநம்பிக்கையையும் கொண்ட கசப்பான மனிதர்களாக இருப்பார்கள். இப்படத்திலோ, கதாபாத்திரங்கள் அனைவருமே மிகவும் நல்லவர்கள். முக்கியமாக சக மனிதர்கள் மீது கோபமோ, பொறாமையோ இல்லாதவர்களாகவும்; தங்கள் மீது பச்சாதாபமோ, சுய கழிவிரக்கமோ கொண்டு இயலாமையை வெளிப்படுத்தாதவர்களாகவும் உள்ளனர். பார்ப்பவர்கள் எல்லாரையும் கெட்டவரெனும் துரியோதன மனக்கசடில் இருந்து, மனிதர்கள் அனைவருமே நல்லவர்கள் தானெனும் தருமனின் மனநிலைக்கு எப்படியோ தன்னை மேம்படுத்திக் கொண்டுள்ளார்.
கடன் வசூலிக்கும் நபரிடம் இருந்து தப்பிக்கும் தந்தை மகனான கோகுல் – அன்பு இருவரின் டூ-வீலர் சாகசம், ஒரு ரோடு ட்ரிப்பாக கவிதை போல் நீள்கிறது. அவர்கள் சந்திக்கும் நபர...