போகன் விமர்சனம்
தனி ஒருவன் வெற்றி ஜோடியான அரவிந்த் சாமி – ஜெயம் ரவி மீண்டும் இணைகிறார் என்பதே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பிற்குப் பிரதான காரணம். அந்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்துள்ளனர் என்றே சொல்லவேண்டும்.
‘போகன்’ என்றால் புலன்களால் பெறும் இன்பத்தை அனுபவிப்பவன் எனப் பொருள் கொள்ளலாம். அப்படி, வாழ்விலுள்ள ராஜ சுகம் அனைத்தையும் அனுபவிக்கும் பெரும் இச்சையுடைய போகனாக அரவிந்த் சாமி கலக்கியுள்ளார். தனக்கு வேண்டியதைப் பெற்றுக் கொள்ள, ஆய கலைகளில் 52வது கலையான ‘பரகாயப் பிரவேசம்’ எனும் சக்தியை அரவிந்த் சாமி பிரயோகிப்பதாகக் காட்டியுள்ளார் இயக்குநர் லக்ஷ்மன்.
ஆனால், கூடு விட்டு கூடு பாய்தல் என்பது இறந்த உடலில் ஒருவர் தன் உயிரினைப் புகுத்திக் கொள்வதாகும். படத்தில் காட்டப்படுவது ‘கூடு மாறுதல் (Body Swapping)’ எனும் கலை. இந்த அழகான ஹாலிவுட் கற்பனைக்கும், சித்தர் போகர் அருளியதாகப் படத்தில் காட்டப்படும் பரகாயப் பி...