Shadow

Tag: இயக்குநர் விஜயன்.சி

பேரழகி ஐ.எஸ்.ஓ விமர்சனம்

பேரழகி ஐ.எஸ்.ஓ விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
இளமையையும், பேரழகையும் தரும் சித்தரின் சூட்சும ஃபார்முலா, அழகுசாதனப் பொருட்களைத் தயாரிக்கும் ஒரு கார்ப்ரேட் நிறுவனத்திடம் சிக்குகிறது. அந்நிறுவனம், ஆதரவற்ற முதியவர்கள் மீது அந்த ஃபார்முலாவைப் பரிசோதித்துப் பார்க்கின்றனர். அவர்களிடம் சிக்கும் சச்சுவின் மேல் அம்மருந்து பிரயோகிக்கப்பட, சச்சு தன் பேத்தி ஷில்பா மஞ்சுநாத் போல் உருமாறிவிடுகிறார். உருவ ஒற்றுமை ஏற்படுத்தும் குழப்பத்தை நகைச்சுவையாகவும், கார்ப்ரேட் கம்பெனியின் தகிடுதத்தத்தை சீரியசாகவும் படம் சொல்லியுள்ளது. 'நீ என்ன மாயம் செய்தாய்', 'மித்ரா' ஆகிய படங்களில் நடித்த விவேக் கதாநாயகனாக நடித்துள்ளார். பேத்தி காதலைச் சொல்லிவிட, பாட்டியோ முறைப்பைக் காட்ட, விஜய் தவிக்கும் காட்சிகள் நன்றாக உள்ளன. ஷில்பா மஞ்சுநாதின் அப்பாவாக லிவிங்ஸ்டன் நடித்துள்ளார். அவரது அம்மாவான சச்சுவை, லிவிங்ஸ்டனின் மனைவி சாடை பேசி விட, சச்சு கோபித்துக் கொண்டு வெளியேறி ...
பேரழகி ஐ.எஸ்.ஓ – சயின்ஸ் ஃபிக்ஷன் படம்

பேரழகி ஐ.எஸ்.ஓ – சயின்ஸ் ஃபிக்ஷன் படம்

சினிமா, திரைச் செய்தி
'பேரழகி ஐ.எஸ்.ஓ ' எனும் படத்தைக் கிரியாமைன்ஸ் மூவி மேக்கர்ஸ் சார்பில் விஜயன்.சி என்பவர் தயாரித்து இயக்கியுள்ளார். 'நீ என்ன மாயம் செய்தாய்', 'மித்ரா' ஆகிய படங்களில் நடித்த விவேக் கதாநாயகனாகவும், காளி படத்தில் அறிமுகமாகி, இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும் படம் மூலம் பிரபலமான நடிகை ஷில்பா மஞ்சுநாத் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் நடிகை சச்சு, இயக்குநர் சரவண சுப்பையா, நடிகர்கள் லிவிங்ஸ்டன், ஆர். சுந்தர்ராஜன், டெல்லிகணேஷ், மீசை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். 'நாகேஷ் திரையரங்கம்' புகழ் இ.ஜே. நவ்ஷாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். சார்லஸ் தனா இசையமைத்துள்ளார். படத்தினைப் பற்றி பேரழகி ஐ.எஸ்.ஓ படத்தின் இயக்குநர் விஜயன் கூறியதாவது, "பேரழகி ஐ.எஸ்.ஓ ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் படம். சீரியஸாக இல்லாமல், மிக ஜாலியாக காமெடி கலந்து இப்படத்தை எடுத்துள்ளேன். இது ஹீரோயினுக்கு முக்கியத்துவம்...