அட்டி – பசங்க கூடுற இடம்
மா.கா.பா. நாயகனாக ரவுசு விடும் படம்தான் அட்டி. இதில் மா.கா.பா. ஆனந்த் கானா பாடகராகவும், அஜித் ரசிகராகவும் நடித்துள்ளார்.
அட்டி என்றால் என்ன?
பசங்க உட்கார்ந்து அரட்டை அடிப்பதற்கென அனைத்து ஏரியாவிலும் ஓரிடம் இருக்கும். அந்த இடத்திற்குப் பெயர் தான் அட்டி. இது ஒரு பக்கா கமர்ஷியல் படமென்கிறார் அறிமுக இயக்குநர் விஜயபாஸ்கர். இவர் இயக்குநர் சுராஜ் அவர்களிடம் மாப்பிள்ளை, அலெக்ஸ் பாண்டியன் ஆகிய திரைப்படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.
ராம்கி நாயகனாக நடித்த சமயங்களில் கூட, உருவத்தில் எந்த மாற்றமும் செய்யாமல் அப்படியே நடிப்பார். அடுத்த படத்திற்கான கன்ட்டினியூட்டி (Continuity) தவறி விடுமென்பதால், காவல்துறை அதிகாரியாக நடிக்கும் பொழுது கூட தலை முடியைக் கூட வெட்டிக் கொள்ளமாட்டாராம். ஆனால் இப்படத்தில், மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக மீசையை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
...