‘மிஷன் சாப்டர் 1’ திரைத் துறையில் எனக்கு புதிய இன்னிங்ஸ்” – நடிகை ஏமி ஜாக்சன்!
தமிழ் திரையுலகில் தனது அழகாலும் திறமையான நடிப்பாலும் பார்வையாளர்களின் இதயங்களை கொள்ளையடித்த நடிகை ஏமி ஜாக்சன், ‘மிஷன் சாப்டர் 1’ மூலம் தனது புதிய இன்னிங்ஸைத் தொடங்கியுள்ளார். விஜய் இயக்கத்தில், அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படம் ஜனவரி 12, 2024 அன்று திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது வெளியாகியுள்ள படத்தின் புரோமோக்களில் நடிகை ஏமி ஜாக்சனின் ஆக்ஷன் அவதாரம் பார்த்து ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளனர். இந்த படத்தில் நடித்த அனுபவத்தை நடிகை ஏமி பகிர்ந்துள்ளார்.ஏமி ஜாக்சன் கூறியிருப்பதாவது, "இயக்குநர் விஜய் தனது திரைப்படங்களில் வலுவான பெண் கதாபாத்திரங்களை உருவாக்குபவர். இந்த கதாபாத்திரங்களின் தாக்கம் மிகவும் ஆழமானது. எந்தளவுக்கு தாக்கம் என்றால், திரைப்படங்கள் வெளியாகி பல ஆண்டுகளுக்குப் பிறகும் கூட பார்வையாளர்கள் அந்த கதாபாத்திரங்களை நினைவில் வைத்துக் கொள்கிறார்க...