கடிகார மனிதர்கள் விமர்சனம்
ஒண்டிக் குடித்தனத்தில் வாடகைக்குக் குடியிருப்போர்களைக் குறிக்கும் குறியீட்டுச் சொல்லாகக் கடிகார மனிதர்கள் தலைப்பினைப் பொருள் கொள்ளலாம். தங்கள் வருமானத்தின் பெரும்பகுதி வாடகையிலேயே கழிந்து விடுவதாலும், அதிலிருந்து தப்பிக்கவோ, இளைப்பாறவோ இயலாச் சூழலில், கடிகார முட்கள் போல் ஓடிக் கொண்டே இருந்தால் தான் சமாளிக்க இயலும். பேக்கரியில் வேலை செய்யும் கிஷோரைப் பெரிய முள்ளாகவும், பூ கட்டி விற்கும் அவரது மனைவி லதா ராவைச் சிறிய முள்ளாகவும் கற்பனை செய்து கொள்ளலாம்.
ஒரு மகள், இரண்டு மகன், கணவன், மனைவி எனக் கிஷோரின் குடும்பத்தில் மொத்தம் ஐந்து பேர். எவ்வித முன்னறிவிப்புமின்றி, வீட்டைக் காலி செய்யவேண்டிய இக்கட்டான சூழல் நேர்கிறது. பொருட்களை வண்டியில் ஏற்றிய பின்பே வீடு தேடி அலைகின்றனர். பல போராட்டத்திற்குப் பிறகு, 3500 ரூபாய்க்கு ஒரு வீடு வாடகைக்குக் கிடைக்கிறது. ஆனால், ஒரு வீட்டில் அதிகபட்சம் நான்கு பேர் ...