எங்க காட்டுல மழை விமர்சனம்
ஊரை விட்டுச் சென்னைக்கு வந்துவிட்ட முருகனுக்கும் குபேரனுக்கும் ஒரு பெட்டி நிறைய அமெரிக்க டாலர்கள் ($) கிடைக்கிறது. அப்பணத்தைத் தொலைத்த சேட்டு ஒருபுறமும், அதைச் சேட்டிடம் இருந்து திருடிய போலீஸ் அதிகாரியொருவர் மறுபுறமும் தேடுகின்றனர். அவர்களிடம் சிக்கிக் கொள்ளும் முருகனும் குபேரனும் எப்படித் தப்பிக்கின்றனர், பணம் என்னானது என்பதுதான் படத்தின் கதை.
முருகனாக மிதுன் மகேஸ்வரன் நடித்துள்ளார். படத்தில் எந்தக் கதாப்பாத்திரத்திற்கும் வலுவான பின்னணி இல்லை. சென்னை வரும் முருகனுக்கு, 'மதுரைக்காரன்' என்ற ஒரே காரணத்திற்காக வீடு கிடைக்கிறது. அதுவும் மிக மிகச் சுலபமாக. அதை நகைச்சுவையாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் படத்தின் எல்லாக் கதாப்பாத்திரங்களும் இப்படித்தான் வந்து செல்கின்றன. இளமைத் துள்ளலுடன், எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல், மிதுன் மகேஸ்வரன், முருகன் எனும் கதாபாத்திரத்தில் நாயகனாக நடித்துள்ளார். எந்தப்...