Shadow

Tag: இயக்குநர் ஹரீஷ் ராம் LH

தும்பா – காட்டுக்குள் குழந்தைகளுக்கான ஒரு பயணம்

தும்பா – காட்டுக்குள் குழந்தைகளுக்கான ஒரு பயணம்

சினிமா, திரைச் செய்தி
ரீகல் ரீல்ஸ் (OPC) பிரைவேட் லிமிடெட் சுரேகா நியாபதி, ரோல் டைம் ஸ்டுடியோஸ் LLP உடன் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் 'தும்பா'. தர்ஷன், கீர்த்தி பாண்டியன் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, தும்பா என்ற பெண் புலி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்தப் படத்தை ஹரீஷ் ராம் LH இயக்கியிருக்கிறார். அனிருத், விவேக்-மெர்வின், சந்தோஷ் தயாநிதி இசையமைத்திருக்கும் இந்தப் படம் வரும் ஜூன் 21ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. KJR ஸ்டுடியோஸ் சார்பில் கோட்டபாடி ஜே ராஜேஷ் மிகப் பிரம்மாண்டமாக வெளியிடும். "நாங்கள் வசனம் எழுதும்போது, எந்தக் கதாபாத்திரத்தில் யாரெல்லாம் நடிக்கப் போகிறார்கள் என்பதெல்லாம் எங்களுக்குத் தெரியாது. நான் எழுதிய வசனங்களை தர்ஷன், கீர்த்தி, தீனா எல்லோருமே அதன் சாராம்சம் குறையாமல் பேசியிருக்கிறார்கள். எங்கள் எல்லோருக்கும் இந்தப் படத்தின் மூலம் ஒரு புது முகவரி கிடைக்கும் என நம்புக...