Shadow

Tag: இயக்குநர் A. வினோத்குமார்

லத்தி விமர்சனம்

லத்தி விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
கான்ஸ்டபிள் முருகானந்தம், ஹாலிவுட் ஹீரோவிற்கு இணையாக ஒரு மிஷனைக் கையிலெடுத்துச் சாதித்து முடிக்கிறார். சஸ்பெண்டில் இருக்கும் முருகானந்தத்திற்கு, அவரது லத்தி சார்ஜ் திறமைக்காக மீண்டும் வேலை கிடைக்கிறது. ‘இனி லத்தியால் யாரையும் அடிப்பதில்லை’ எனத் தீர்மானிக்கும் முருகானந்தம், அதன் பின் சுமார் நூற்றைம்பது பேரை அடி வெளுக்கிறார். சரியாகச் சொல்வதனால், என்கவுன்ட்டர் செய்வதை ஹீரோயிசமாகக் கருதும் கோலிவுட்டின் சூப்பர் காப்பாகவே மாறிவிடுகிறார். நர்ஸ் கவிதாவாக வரும் சுனைனாவின் தேர்ந்த நடிப்பால், படத்தின் முதற்பாதி அழகாகிறது. நன்றாக நடிக்கும் அவரை உபயோகித்துக் கொள்ள தமிழ் சினிமா காட்டிவரும் சுணக்கம் துரதிர்ஷ்டவசமானது. முருகானந்தத்தின் மகன் ராசுவாக மாஸ்டர் லிரிஷ் ராகவ் நன்றாக நடித்துள்ளார். ஒரு பெண், வன்புணரப்பட்டுக் கொலை செய்யப்படுகிறாள். அதைச் செய்தது யாரென மர்மமாகவே இருக்க, விஷால் அதைக் கண்டுபிடிக்...