பூசாண்டி வரான் விமர்சனம்
பூச்சாண்டி எனும் தலைப்பு கிடைக்காததால், ஆனாலும் அத்தலைப்புத்தான் பொருத்தமாக இருக்கும் என்பதால், பூசாண்டியில் சமரசமாகியுள்ளது படக்குழு. மலேஷியாவில் எடுக்கப்பட்டுள்ள தமிழ்ப்படம்.
கதாபாத்திரங்கள் அனைவருமே பரிச்சயம் அற்ற முகங்கள் என்றாலும், பூச்சுகளற்ற இயல்பான மனிதர்களாய்த் திரையில் நடித்துள்ளதால், மனதோடு ஒட்டிக் கொள்கின்றனர். அவர்கள் தங்களுக்குள் நேசத்துடன் பேசிக் கொள்வதும், அவர்களது விருப்பங்களும், ஒருவரையொருவர் கிண்டலடித்துக் கொள்வதும் என நம்மில் ஒருவராக மாறி விடுகின்றனர். நாயகி ஹம்சினி பெருமாள் முதல் அனைவருமே சிறப்பாக நடித்திருந்தாலும், கதையை முன்னகர்த்துவதில் பெரும்பங்கு வகிக்கும் ஷங்கர் கதாபாத்திரத்தில் வரும் தினேஷ் சாரதி கிருஷ்ணன் பிரமாதப்படுத்தியுள்ளார். க்ளைமேக்ஸில் அவரெடுக்கும் முக்கியமான முடிவொன்று, அவரை எதிர்நாயகனாக்கினாலும், படத்தின் நாயகன் என்று குறிப்பிடும்படி சிறப்பாகத் தன் பங...