
சூது கவ்வும் 2 விமர்சனம்
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் பொழுது, இந்த நாடும் நாட்டு மக்களும் என்னாவார்கள் என்பதை நகைச்சுவையாகச் சொல்ல முயன்றுள்ளது படம்.
'சொதப்பினா ஒத்துக்கணும்' என்ற கடைசி விதிக்கு உட்பட்டு, கடத்தல்காரர்களின் தலைவன் குருநாத் சிறைக்குச் செல்கிறார். அவர் சிறையில் இருந்து வந்ததும், அவருக்கு மட்டுமே தெரியக்கூடிய அம்முவின் மரணத்திற்குக் காரணம் நிதி அமைச்சர் அருமை பிரகாசம் என குருநாத்திற்குத் தெரிய வருகிறது. அருமை பிரகாசத்தைப் பழிவாங்க நினைக்க, அது குருநாத் குழுவை எங்கு இட்டுச் செல்கிறது என்பதுதான் படத்தின் கதை.
சூது கவ்வும் முதல் பாகத்தையும், இரண்டாம் பாகத்தையும் மிக அழகாக இணைத்துள்ளனர். வாகை சந்திரசேகரைக் கொண்டு அமைக்கப்பட்ட பின் கதை சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய் சேதுபதியையும், பாபி சிம்ஹ்சவையும் கதைக்குள் கொண்டு வந்த விதமும் ரசிக்க வைக்கிறது.
இப்பாகத்தில், இரண்டு நல்ல 'சைக்கோ' காவல்துறை ...