Shadow

Tag: இயக்குநர் V.P.விஜி

எழுமின் விமர்சனம்

எழுமின் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
"எழுமின்! விழிமின்! குறி சாரும்வரை நில்லாது செல்மின்!" என்பது விவேகானந்தரின் வாக்கு. விஸ்வநாதன், அர்ஜுன் ஸ்போர்ட்ஸ் அகாடெமி தொடங்கும் பொழுது, மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் விவேகானந்தரின் இவ்வாக்கை மேற்கோள் காட்டியே உரையாற்றுகிறார். இது மாணவர்களுக்கான படம். ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் அப்துல் கலாமும், பதாகைகளில் வலம் வருகிறார். மாணவர்களுக்குத் தற்காப்புக் கலை ஏன் அவசியம் என்றும், விளையாட்டுத் துறையில் நிலவும் ஊழல் குறித்தும் படம் பேசுகிறது. அஜய் குங் ஃபூவிலும், கபின் கராத்தேவிலும், வினீத்தும் அர்ஜுனும் பாக்ஸிங்கிலும், சாரா ஜிம்னாஸ்டிக்கிலும், ஆதிரா சிலம்பத்திலும் திறமைசாலிகள். இவர்கள் ஆறு பேரும் நண்பர்கள். இதில் நான்கு பேர் ஏழைக்குடும்பத்தில் இருந்து வருபவர்கள். 'படிக்காமல் என்ன விளையாட்டு வேண்டிக் கிடக்கு?' என்ற எண்ணமுடைய அவர்களின் பெற்றோர்களைச் சமாதானம் செய்து, மாணவர்கள் விருப்பப்ப...
எழுமின் – முதல் தற்காப்பு கலை திரைப்படம்

எழுமின் – முதல் தற்காப்பு கலை திரைப்படம்

சினிமா, திரைச் செய்தி
ஒரு படம் தயாரிப்பாளருக்கும் கதாநாயகனுக்கும் எதைத் தந்தது என்பதை விட அந்தப்படம் சமூகத்திற்கு என்ன தந்தது என்பது தான் முக்கியம். இதைக் கவனத்தில் கொண்டு உருவாகி இருக்கும் படம் தான் ‘எழுமின். தமிழில் வரும் முதல் தற்காப்பு கலை திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. வையம் மீடியாஸ் நிறுவனம் சார்பில் வி.பி.விஜி தயாரித்து இயக்கியிருக்கும் இப்படத்திற்கு தோள் கொடுத்திருக்கிறார் நடிகர் விவேக். மேலும் தேவயானி, அழகம்பெருமாள், பிரேம் போன்ற நடிகர்களோடு சிறுவர் சிறுமிகளும் இப்படத்தின் பாகமாக இருக்கிறார்கள். அக்டோபர் 18ம் தேதி வெள்ளித்திரைக்கு வர இருக்கும் இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. நடிகர் விவேக் பேசும்போது, “அக்டோபர் 18-ம் தேதி என்றதும் எல்லோர் முகத்திலும் ஒரு பரவசம் தெரிந்தது. ஏனென்றால் அன்று புரட்டாசி முடிகிறது. எழுமின் அன்று தான் ரிலீஸ். இந்தப் படத்தைப் பற்றி ஏற்கெனவே ...
மாணவர்களின் ‘எழுமின்’ – விவேக்

மாணவர்களின் ‘எழுமின்’ – விவேக்

சினிமா, திரைச் செய்தி
'வையம் மீடியாஸ்' சார்பில் தயாரிப்பாளர் V.P.விஜி தயாரித்து இயக்கி இருக்கிற திரைப்படம் “எழுமின்”. தற்காப்புக் கலையில் சாதிக்கத் துடிக்கும் ஆறு சிறுவர்களைச் சுற்றி நடக்கிற இப்படத்தில் விவேக், தேவயானி ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களாக நடித்திருக்கிறார்கள். இந்த விழாவில் “செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்” திரு. கடம்பூர் ராஜு, “விளையாட்டு துறை அமைச்சர்” திரு. பாலகிருஷ்ண ரெட்டி, நடிகர்கள் விவேக், ஆரி, “ஹிப்-ஹாப்” ஆதி, இசையமைப்பாளர்கள் டி.இமான், ஸ்ரீகாந்த் தேவா, கணேஷ் சந்திரசேகர், நடிகர்கள் மயில்சாமி, பிரேம்குமார், உதயா, மற்றும் தயாரிப்பாளரும் இயக்குநருமாகிய V.P.விஜி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டார்கள். இந்த விழாவில் பேசிய செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு. கடம்பூர் ராஜு, “இவ்வளவு மாணவர்கள் மத்தியில் இந்த விழா மிகுந்த எழுச்சியோடு நடைபெறுகிறது. நடிகர் விவேக் எங்கள் ஊரைச் சேர...