இரட்டா – இரட்டை வேடத்தில் கலக்கும் ஜோஜு ஜார்ஜ்
ஜோஜு ஜார்ஜ் நடிப்பில் உருவாகியுள்ள "இரட்டா" படத்தின் அதிகாரபூர்வ ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. பல சஸ்பென்ஸ்களைக் கொண்டுள்ளது இந்த த்ரில்லர் படம். இப்படத்தில் ஜோஜு ஜார்ஜ் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். ஜோஜு, இரட்டை சகோதரர்களான வினோத் மற்றும் பிரமோத் ஆக நடித்துள்ளார். அறிமுக இயக்குநர் ரோஹித் எம்.ஜி.கிருஷ்ணன் இப்படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தில் தமிழ் - மலையாள நடிகை அஞ்சலி கதாநாயகியாக நடிக்கவுள்ளார். ஜோஜு ஜார்ஜுக்குச் சொந்தமான 'அப்பு பாத்து பப்பு புரொடக்ஷன்ஸ்', மார்ட்டின் பிரகாட் பிலிம்ஸ் மற்றும் சிஜோ வடகன் ஆகியோர் இப்படத்தைத் தயாரிக்கின்றனர்.ஏற்கெனவே மாநில மற்றும் தேசிய விருதுகளைப் பெற்றுள்ள ஜோஜு ஜார்ஜஜின் கேரியரில் இன்னொரு திருப்புமுனையாக அமையும் என்பதை ட்ரெய்லர் உறுதிப்படுத்துகிறது. பல படங்களில், போலீஸ் வேடங்களில் நடித்திருக்கும் ஜோஜுவின் கேரியரில் இன்னொரு பவர்ஃபுல் போலீஸ் ரோலாக அ...