Shadow

Tag: இராஜராஜசோழன்

அரு.ராமநாதன்

அரு.ராமநாதன்

சினிமா, தொடர்
மாயலோகத்தில்.. ‘காதல்' புனிதமானது, பவித்திரமானது என்றெல்லாம் திரைப்படங்களில் வசனம் பேசுவார்கள் அறிவோம். எடுக்கப்படும் படங்களில் 99 விழுக்காடும் காதலை மையமாக வைத்தே திரைக்கதை அமைக்கப்படும். இது ஒரு நியதிபோல் காலம் காலமாக நடந்து வருகிறது. 'காதல்' இல்லாமல் உலகில் வேறு எதுவுமே கிடையாது என்றும் நிலை நிறுத்தியாகிவிட்டது. எனவே 'காதல்' வாழ்க. 'காதல்' என்கிற வார்த்தையை ஒரு கெட்ட வார்த்தையைப்போல் கருதிய காலமும் ஒன்று உண்டு. காதல் வயப்படுவார்கள், ஆனால் காதல் என்கிற வார்த்தையைப் பிரயோகித்தால் அவனை ஒரு மாதிரியாகப் பார்ப்பார்கள். இக்கால கட்டத்தில் மிகவும் துணிச்சலுடன் 'காதல்' என்கிற பெயரில் ஒரு பத்திரிகை ஆரம்பிக்க வேண்டுமானால், ஆரம்பித்தவருக்கு எந்த அளவு துணிவு இருந்திருக்கவேண்டும்? அப்படித் துணிந்தவர்தான் அரு.ராமநாதன். சிவகங்கை மாவட்டத்தில் கண்டனூர் எனும் ஒரு ஊர் இருக்கிறது. இந்த ஊரில் 1924 ஆம் ஆண்ட...