அரிசியின் பின்னால் இருக்கும் அரசியலைப் பேசும் “அரிசி” திரைப்படம்
இசைஞானி இளையராஜா இசையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச்செயலாளர் தோழர் இரா.முத்தரசன் , நடிகர் சமுத்திரக்கனி இணைந்து நடிக்கும் “அரிசி” திரைப்பட படப்பிடிப்பு நிறைவடைந்தது!!
மோனிகா புரடக்ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் S.A.விஜயகுமார் இயக்கத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் இரா. முத்தரசன், நடிகர் சமுத்திரக்கனி இணைந்து நடிக்க, இன்றைய சமூகத்தில் உணவின் பின்னாலான அரசியலை, அழுத்தமாக பேசும் படைப்பாக உருவாகி வரும் திரைப்படம் “அரிசி”. இப்படத்தின் முழுப் படப்பிடிப்பையும் முடித்த படக்குழு, தற்போது இறுதிக்கட்ட பணிகளைத் துவக்கியுள்ளது.
நம் உணவான அரிசியின் பின்னால் இருக்கும் அரசியலை, விவசாயத்தின் உண்மைகளை பேசும் அழுத்தமான படைப்பாக இப்படம் உருவாகிறது. மேற்கத்திய உணவை முன்மொழியும் கார்பரேட், நம் பாரம்பரியத்தை, நாம் அறியாமலே அழித்து வருகிறது. நம் சமூகத்தின் மிக முக்கியமான இந்த பிரச்சனையை ...