Shadow

Tag: இளையராஜா

இளையராஜாவின் இசைக்கான சமர்ப்பணம் – இயக்குநர் ச. பிரேம்குமார்

இளையராஜாவின் இசைக்கான சமர்ப்பணம் – இயக்குநர் ச. பிரேம்குமார்

சினிமா, திரைத் துளி
நான் ச. பிரேம்குமார், '96 படத்தின் எழுத்தாளர் மற்றும் இயக்குநர். கடந்த மார்ச் - 7'ஆம் தேதி 'Cheyyaru Balu official' என்ற Youtube Channel'ல், 'உங்களுக்கு ஆண்மை இல்லையா, என் பாட்டை யூஸ் பண்ணி இருக்கீங்க.. நாக்க புடுங்கறா மாதிரி கேட்ட இளையராஜா' என்ற தலைப்பில் ஒரு காணொளி வெளியானது. அதில் திரு.செய்யாறு பாலு வெளியான மஞ்ஞுமள் பாய்ஸ் மற்றும் நான் எழுதி இயக்கி 2018-இல் வெளியான ‘96 திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட இசைஞானி இளையராஜாவின் பாடல்களுக்கு நாங்கள் முறையான அனுமதி பெறாதவாறு பேசியுள்ளார். குறிப்பாக, '96 பற்றிப் பேசும்போது, இசைஞானி இளையராஜா அவர்கள் சொன்னதை மேற்கோள் காட்டியதோடு நிறுத்தாமல், இன்னொரு வார்த்தை, 'பொ' என்கிற வார்த்தையை வேற யாராவது இருந்தா யூஸ் பண்ணி இருப்பாங்க' என்றும் பேசியுள்ளார். மேலும் அதற்கு ‘96 படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா மன்னிப்பு கேட்டதாகவும் சொல்கிறார். வன்மம் நி...
”சேருமிடம் ஒன்று இருக்குமானால் அது இளையராஜாவின் பாதங்களே!” – மிஷ்கினின் இசைப்பயணம்

”சேருமிடம் ஒன்று இருக்குமானால் அது இளையராஜாவின் பாதங்களே!” – மிஷ்கினின் இசைப்பயணம்

சினிமா, திரைச் செய்தி
மாருதி ப்லிம்ஸ் மற்றும் டச் ஸ்க்ரீன் என்டர்டெயின்மெண்ட் சார்பில்  எஸ்.ராதாகிருஷ்ணன் மற்றும் எஸ்.ஹரி இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் “DEVIL” . சவரக்கத்தி திரைப்படத்தை இயக்கிய  இயக்குநர் ஆதித்யா இப்படத்தை இயக்கியுள்ளார். விதார்த், பூர்ணா, ஆதித் அருண், சுபஸ்ரீ ராயகுரு மற்றும் மிஷ்கின் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்திற்கு முதன்முறையாக இயக்குநர் மிஷ்கின் இசையமைத்து இருக்கிறார். இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சத்யம் திரையரங்கில் வைத்து நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட எழுத்தாளர் ஜெயமோகன் பேசும் போது, ”இந்த உலகத்தில் இருக்கிற எல்லா விசயங்களையும் குறித்து கருத்து சொல்பவன் நான், ஆனால் ஒன்றைக் குறித்துப் பேச மட்டும் எனக்குத் தகுதியில்லை என்று கூறினால் அது கண்டிப்பாக இசை குறித்துத்தான். ஏனென்றால் எனக்கு இசையைப் பற்றி ஒன்ற...
பிரைம்  வீடியோ டைரக்ட்டில்  புராண இதிகாச த்ரில்லரான  சிபிராஜின்  ‘மாயோன்’

பிரைம்  வீடியோ டைரக்ட்டில்  புராண இதிகாச த்ரில்லரான  சிபிராஜின்  ‘மாயோன்’

சினிமா, திரைச் செய்தி
சென்ற ஆண்டு சிபிராஜ் நடிப்பில்,  டபுள் மீனிங் புரொடெக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வெளியான “மாயோன்” திரைப்படம் திரைப் பார்வையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்றது.  நல்ல கதையம்சத்துடன் பொழுதுபோக்கிற்கான விசயங்களை உள்ளடக்கி இருந்த காரணத்தால் குடும்பம் குடும்பமாக  இப்படத்தைப் பார்க்க பொதுமக்கள் வந்தனர். மேலும் 47-வது கனடா டொரண்டோ திரைப்பட விழாவில் புராண இதிகாசப் பிரிவில் “மாயோன்” திரைப்படம் விருதினையும் வென்றது. படத்திற்கு இசையானி இளையராஜாவின் பின்னணி இசையும், பாடல்களும் பெரும் பலமாக அமைந்திருந்தன.விமர்சகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும்  கதை, அதைக் காட்சிப்படுத்திய அழகியல் போன்ற காரணங்களுக்காகவும் அதன் உள்ளடக்கத்திற்காகவும் ,  புராண இதிகாச த்ரில்லர் வகைத் திரைப்படம் என்கின்ற புதுமையான வகைமைக்காகவும் இப்படம் ரசிகர்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் தனித்து...
மேற்குத் தொடர்ச்சி மலை விமர்சனம்

மேற்குத் தொடர்ச்சி மலை விமர்சனம்

சமூகம், சினிமா, திரை விமர்சனம்
குறிஞ்சி நிலத்தின் கரடுமுரடான வாழ்வியலை அட்டகாசமாகப் பதிவு செய்துள்ளனர். கும்மிருட்டு விலகாத விடியற்காலையில் எழும் ரங்கசாமி, மலையில் ஏறியிறங்கும் தூரம் மிக நீண்டது. அவரது வேலை என்பது ஏலக்காய் மூட்டையைச் சுமந்து கொண்டு மலையில் இறங்கும் சுமைக்கூலி வேலை. ஒரு கையளவு நிலம் வாங்க நினைக்கும் அவனது வாழ்வு, அவன் தினமும் பயணிக்கும் மலைப்பாதை போலவே ஏறியிறங்கி ஒரு வெற்றுவெளியில் முடிகிறது. தேனி ஈஸ்வர். ஒளிப்பதிவில் மாயம் செய்துள்ளார். ஒரு வாழ்க்கையை அதன் அருகில் இருந்து பார்த்த உணர்வையும், கோம்பையில் இருந்து கேரள எல்லை இடுக்கி மாவட்டம் வரை மலையைச் சுற்றிப் பார்த்த ஒரு திருப்தியையும் தருகிறது படத்தின் விஷுவல். மனம் பிசகிய பாட்டி ஒருவர் தன் கையிலுள்ள வளையல்களை எண்ணிக் கொண்டிருப்பார். தகதகக்கும் பொன்னிற சூரிய வெளிச்சத்தின் பின்னணியில் வரும் அந்த ஷாட்டு ரசனையின் உச்சம். படத்தில் வரும் கதாபாத்திரங்களில...
குற்றமே தண்டனை விமர்சனம்

குற்றமே தண்டனை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
இரண்டு சொற்களாலான தலைப்பிலேயே படத்தின் முழுக் கதையும் சொல்லிவிட்டார் காக்கா முட்டை இயக்குநர் மணிகண்டன். படத்தில் மிகக் குறைவான கதாபாத்திரங்கள், நான்கைந்து லோக்கேஷன்கள் தான் என்றாலும் மிக நிறைவான படம். இவ்வாறான நேர்த்தியான படங்களின் வரவு அதிகமாக வேண்டும் என்ற ஆவலாதியை ஏற்படுத்துகிறது. இயக்குநர் மணிகண்டன் ஒதுங்கி நின்று நம் மனதோடு அழகாய் கண்ணாமூச்சி விளையாடுகிறார். இளம்பெண் ஒருத்தி இறந்து விடுகிறாள். அவரைக் கொன்றது யாரெனச் சொல்லாமல் நம் முடிவுக்கே படத்தின் முடிவை விட்டுவிடுகிறார். குற்றவாளி யாரெனத் தெரியாத அக்கொலை வழக்கிற்கு, அருண் என்பவனை காவல்துறையினர் பலிகடாவாக்குகின்றனர். ஆனால், சந்தேகத்தின் பலனை அருணுக்குப் பார்வையாளர்களும் அளித்துவிடக் கூடாதென, மக்களின் கூட்டு மனசாட்சிக்கு ஒரு 'செக் (check)' வைக்கிறார். அருண் பணக்காரத் திமிர் கொண்டு பெண்கள் பின்னாடி சுற்றும் ஊதாரி இளைஞனெனச் சொல்லி வ...
அப்பா விமர்சனம்

அப்பா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
அரசுப் பள்ளிகளின் மீது வீசிய சாட்டையை, அதனினும் வலுவாகத் தனியார் பள்ளிகளின் மீது வீசியுள்ளார் தயாளன். ஒரு லட்சிய தந்தைக்கு எடுத்துக்காட்டாக தயாளன் எனும் பாத்திரத்தில் நடித்துள்ளார் படத்தைத் தயாரித்து இயக்கியுள்ள சமுத்திரக்கனி. மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் வீட்டிலேயே மனைவிக்கு பிரசவம் பார்த்தும், 'நாம் இணைந்து நம் மகனை உயர்த்துவோம்' எனக் குழந்தையின் தொப்புள் கொடி மேல் எல்லாம் சபதம் எடுத்தும் கிலியைக் கிளப்புகிறார். பார்வையாளர்களுக்குப் பாடமெடுத்துப் புத்தி புகட்டுவது, நன்னெறியை எடுத்தியம்புவது என்ற அவரது அக்கறை உடல் மொழியிலும், வசன உச்சரிப்பிலும் துருத்திக் கொண்டே இருக்கிறது. ஆனால், சில பாடங்களை இப்படி நேரடியாகச் சொன்னால்தான், சிலரையேணும் அது போய்ச் சேரும். பெற்றோர்களின் மனதில் எங்குப் பதியாமல் போய் விடுமோ என, சசிகுமாரை வைத்தும் ஒருமுறை ரிவிஷன் செய்து விடுகிறார் சமுத்திரக்கனி. ‘ச...
தாரை தப்பட்டை விமர்சனம்

தாரை தப்பட்டை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
இளையராஜாவின் இசையில் வந்திருக்கும் 1000வது படம் என்ற வரலாற்றுச் சிறப்பினைப் பெற்ற படம். சன்னாசி கரகாட்டக் குழு, அதன் பிரதான ஆட்டக்காரி சூறாவளி இல்லாமல் நொடிந்து போகிறது. சூறாவளிக்கு என்னானது என்பது தான் படத்தின் கதை. சூறாவளி என்ற கதாபாத்திரத்தின் பெயருக்கு ஏற்ப வரலட்சுமி அசத்தியுள்ளார். முதல் பாதி படத்தைத் தனியொருவராகச் சுமக்கிறார். சன்னாசி மீது அவர் வைத்திருக்கும் காதல் பிரம்மிப்பூட்டுகிறது. அதை வரலட்சுமி மிக ஆர்ப்பாட்டமாக முன் வைக்கிறார். படத்தின் ஒரே ஆறுதல் இவர் தோன்றும் காட்சிகள் மட்டுமே! படத்தின் நாயகனான சன்னாசியை விட அவரது தந்தையாக வரும் சாமி புலவர் ஈர்க்கிறார். சன்னாசியாக சசிகுமாரும், சாமி புலவராக G.M.குமாரும் நடித்துள்ளனர். கரகாட்டக் குழுவினர் எதிர்கொள்ளும் வறுமையை ஊறுகாய் போல் தொட்டுச் சென்றுள்ளார் பாலா. பாலாவின் படங்களுடைய தீவிரத்தன்மையை, படம் நெடுகே வரும் மெல்லிய எள்ளல்கள் ...