Shadow

Tag: இவானா

மதிமாறன் விமர்சனம்

மதிமாறன் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
அப்பார்ட்மென்ட்களில் தொடர்ச்சியாக மர்மமான முறையில் கொல்லப்படும் பெண்கள், உருவம் குள்ளமாக இருந்தாலும் தன் பாசமான தாய் தந்தையரோடும், தனக்கு உறுதுணையாக இருக்கும் தன் அக்காள் மதியுடனும் சந்தோஷமாக வாழ்ந்தபடி தன் அப்பாவைப் போல் வருங்காலத்தில் ஒரு போஸ்ட்மேனாக வேண்டும் என்ற கனவுடன் வாழ்ந்து வரும் நெடுமாறன். இந்த இரு வேறு புள்ளிகளும் சந்திக்கும் இடம் தான் “மதிமாறன்” திரைப்படத்தின் கதை. நெடுமாறனாக வெங்கட் செங்குட்டுவன் நடித்திருக்கிறார். இவர் தான் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “அயலான்” படத்தில் அயலான் வேடத்தில் நடித்து இருக்கிறார். மதிமாறன் திரைப்படத்தில் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார் வெங்கட் செங்குட்டுவன். தன்மான உணர்வு, சமூகத்தின் மீதான வெறுப்பு, அக்காள் மதி மீதான அன்பு, தந்தையின் மீதான மரியாதையும் அவர் தொழில் மீதான பிடித்தமும்,  சக தோழியுடனான காதலும் நட்பும் என...
”ஒரு படத்தில் எம்.எஸ்.பாஸ்கர் இருந்தாலே அது நல்ல படம்” – மதிமாறன் டிரைலர் வெளியீட்டு விழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு

”ஒரு படத்தில் எம்.எஸ்.பாஸ்கர் இருந்தாலே அது நல்ல படம்” – மதிமாறன் டிரைலர் வெளியீட்டு விழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு

சினிமா, திரைச் செய்தி
ஜி.எஸ் சினிமா இன்டர்நேஷனல் சார்பில் லெனின் பாபு தயாரிப்பில் அறிமுக இயக்குநர் மந்திர வீரபாண்டியன் இயக்கத்தில், இவானா, வெங்கட் செங்குட்டுவன் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க , மாறுபட்ட திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “மதிமாறன்”. இம்மாதம் திரைக்கு வரவுள்ள நிலையில் இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக, பண்பலை நண்பர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது.இவ்விழாவினில்…தயாரிப்பாளர் நவீன் சீதாராமன் பேசியதாவது… இது நிஜமா கனவா என அறியமுடியவில்லை. நான் மிகவும் எமோஷனாலாக இருக்கிறேன். நான் ஹாலிவுட்டில் வேலை செய்திருந்தாலும் இங்குத் தமிழ் சினிமாவில் இவ்வளவு பெரிய ஜாம்பவான்கள் இருக்கும் மேடையில் இருப்பது பெருமையாக இருக்கிறது. அண்ணன்கள் தான் தம்பிகளைக் கஷ்டப்பட்டு பெயர் வாங்க வைப்பார்கள். என் அண்ணன் பாலா சீதாராமன், லெனின் இருவருக்கும...
“மதிமாறன்” திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !!

“மதிமாறன்” திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !!

சினிமா, திரைச் செய்தி
ஜி.எஸ் சினிமா இண்டர்நேஷனல் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் மந்த்ரா வீரபாண்டியன் இயக்கத்தில், இவானா, வெங்கட் செங்குட்டுவன் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க , மாறுபட்ட திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள “மதிமாறன்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.Don’t judge the book by its cover புத்தகத்தின் அட்டையை பார்த்து புத்தகத்தை மதிப்பிடாதே என்பதாக உலகின் மிகச்சிறந்த பழமொழி ஒன்று உள்ளது, அது தான் இப்படத்தின் மையம். தன்னுடன் இரட்டையராக பிறந்த சகோதரியைத் தேடும் நாயகனின் தேடல் தான் இப்படத்தின் கதை.பிரபல இயக்குநர் பாலாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய மந்த்ரா வீரபாண்டியன் இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். பாடி ஷேமிங் எந்த வகையிலும் தவறென்பதையும், இயலாதவர்களின் மீதான சமூகத்தின் பார்வையையும் கேள்விகுள்ளாக்கும் வகையிலுமான கதையை, அட்டகாசமான திரைக்கதையில் மாறுபட்ட திரில்லர் டிராமாவாக உர...
LGM விமர்சனம்

LGM விமர்சனம்

இசை விமர்சனம், இது புதிது, சினிமா
தங்களுக்குள் காதல் ஒத்துவருமா என்று தெரிந்து கொள்ள 2 வருட அக்ரிமென்ட், கல்யாணம் செய்து மாமியாருடன் ஒரே வீட்டில் வாழ்வது ஒத்து வருமா என்பதைத் தெரிந்து கொள்ள ஒரு ட்ரிப். இது தான் LGM இன் கதை. இந்தியக் கிரிக்கெட்டின் இன்றைய அடையாளமாகவும், சென்னையின் தவிர்க்கமுடியாத அடையாளமாகவும் மாறி இருக்கும் தல தோனியின் தோனி எண்டர்டெயின்மெண்ட் சார்பாக தோனியின் மனைவி ஷாக்ஷி தோனி தயாரித்திருக்கும் திரைப்படம் LGM என்பதால் படத்தின் மீது மிகப் பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. அந்த எதிர்பார்ப்பைத் திரைப்படம் பூர்த்தி செய்திருக்கிறது என்பதே உண்மை. தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் கெளதம், மீராவிற்கும் ஒருவரையொருவர் பிடித்திருக்கிறது. ஆனாலும் இருவருக்குள்ளும் செட் ஆகுமா என்பதைத் தெரிந்து கொள்ள நவீனகால யுக்தியான 2 வருடம் பழகிப் பார்க்கும் கான்செப்டை கையில் எடுக்கிறார்கள். ஒரு வழியாக இருவருக்கும் ஒத்துப் ப...
லவ் டுடே விமர்சனம்

லவ் டுடே விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
இன்றைய காதல் என்பதை விட இன்றைய இளைஞர்கள் பற்றிய படம் என்பதே பொருத்தமாக இருக்கும். App(a) Lock என்ற தனது குறும்படத்தை முழு நீளத் திரைப்படமாக உருவாக்கியுள்ளார் பிரதீப் ரங்கநாதன். இன்றைய யூத்களின் பல்ஸைக் கச்சிதமாகப் பிடித்து, காமெடி, காதல், சென்டிமென்ட், எமோஷன் என கலந்து கட்டி எழுதி இயக்கி நடித்துள்ளார் பிரதீப் ரங்கநாதன். காலதாமதமான (Belated) தீபாவளிக் கொண்டாட்டத்தைத் திரையரங்கிற்குக் கொண்டு வந்துள்ளனர் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட். உத்தமன் பிரதீப்பும், நிகிதாவும் காதலிக்கின்றனர். நிகிதாவின் தந்தை வேணு சாஸ்திரி, காதலர்கள் இருவரின் மொபைல் ஃபோன்களையும் மாற்றிக் கொண்டு ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டார்களா என தெரிந்து கொள்ள ஒரு வினோதமான நிபந்தனை விதிக்கிறார். உத்தமனின் ஃபோன் நிகிதாவிடமும், நிகிதாவின் ஃபோன் உத்தமனிடமும் செல்ல திரைக்கதை சூடு பிடிக்கிறது. தனது முதற்படமான கோமாளியில் யோகிபாபுவைக் குண...