Shadow

Tag: ஈரோடு மகேஷ்

இணையதளம் விமர்சனம்

இணையதளம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஒரு கொலையை நேரடியாக ஒளிபரப்புகிறது 'வெல்லலாம் வாங்க' என்ற இணையதளம். அதன் பார்வையாளர்கள் எண்ணிக்கை கூடக் கூட கொலை செய்யப்படும் நேரம் துரிதமாகும். அதாவது அதன் பார்வையாளர்களே கொலையாளர்கள். நடத்துவது யார், ஏன் அப்படிச் செய்கிறார்கள் என்பதே படத்தின் கதை. இரட்டை இயக்குநர்களான ஷங்கரும் சுரேஷும் மிக அழகான கதையை உருவாக்கியுள்ளார்கள். ஆனால், அதன் திரைக்கதையும் தொழில்நுட்ப நேர்த்தியும் கதைக் கரு அளவுக்கு ஷார்ப்பாக இல்லை. நியாயமாகப் படம், பார்வையாளர்களைப் பதற்றத்திலும் குற்றவுணர்விலும் ஆழ்த்தியிருக்க வேண்டும். ஆனால், காட்சிக் கோணங்களும் படத்தொகுப்பும் அவ்வேலையைச் செய்யத் தவறிவிடுகிறது. நம்மால் ஓர் உயிர் போகப் போகிறதெனத் தெரிந்தும், எவ்வித லஜ்ஜையும் கிலேசமுமின்றி மக்கள் அந்தக் கொலை புரியும் இணையதளத்தைப் பார்வையிட்டுக் கொண்டே, கொலைக்குத் துணை புரிகிறார்கள். 'நான் மட்டுமா பார்க்கிறேன்? அவனை முதலில் பா...
ஜம்புலிங்கம் 3டி விமர்சனம்

ஜம்புலிங்கம் 3டி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஜப்பானில் கடத்தப்படும் பேபி ஹம்சியைத் தமிழக இளைஞனான ஜம்புலிங்கம் எப்படி மீட்டு அவளது பெற்றோரிடம் ஒப்படைக்கிறான் என்பதே படத்தின் கதை. கதை ஜப்பானில் நிகழ்வதால், ரஜினிக்கு ஜப்பானில் இருக்கும் புகழைப் படத்தில் காட்டியுள்ளனர். அதை இன்னும் சுவாரசியமாக்கியிருக்கலாம். சிட்டி 'தி ரோபாட்'டாக லொள்ளு சபா ஜீவா வருகிறார். சகுனம் எனும் பாத்திரத்தில் ஈரோடு மகேஷ் நடித்திருக்கிறார். டான் டேவிட் சகுனத்தைத் தன்னுடன் கை விளங்கால் பிணைத்துக் கொண்டு குளியலறை, படுக்கையறை என இழுத்துக் கொண்டு போகிறார். கலை ஆர்வலர் டான் டேவிடாக ஒகிடா எனும் ஜப்பானியர் நடித்துள்ளார். ஐரீன் எனும் பாத்திரத்தில் அஞ்சனா கீர்த்தி நாயகியாக நடித்துள்ளார். ஜம்புவால் கவரப்பட்டு, அவனைக் காதலிக்கும் பாரம்பரிய பாத்திரத்தில் வருகிறார். பரதநாட்டியக் கலைஞராகவும், ஹம்சிகாவின் அம்மாவாகவும் நடித்துள்ளார் சுகன்யா. ஓர் இரவு, அம்புலி, ஆ ஆகிய படங்களைத் ...