ஜெ. அன்பழகன் – கொரோனா காலத்து வரலாற்று நாயகன்
தன்னுடைய தந்தை பழக்கடை ஜெயராமனைப் போலவே சென்னை மாநகரில் திராவிட முன்னேற்ற கழகத்திற்குக் கிடைத்த பெரும் செயல் வீரர் மறைந்த சட்டமன்ற உறுப்பினரான ஜெ.அன்பழகன். தென்சென்னையில் கிட்டு சிட்டாகப் பறந்து கொண்டிருந்த காலம் வரையிலும், அடக்கி வாசிக்கப்பட்டுக் கொண்டிருந்தவர் கிட்டுவின் மரணத்திற்குப் பிறகே லைம்லைட்டுக்கு வந்தார்.
கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று வந்தவரை ஓய்விலேயே சில வருடங்கள் இருக்கும்படி பணித்து, பின்பு, ‘மருத்துவர் சான்றிதழ் கொடுத்தால்தான் களப்பணியில் உன்னை இறக்குவேன்’ என்று பாசத்துடன் சொல்லி இவரை அரவணைத்தவர் கருணாநிதி.
சென்னையில் இருக்கும் அ.தி.மு.க. செயல் வீரர்களுக்கு ஈடு கொடுக்கும்வகையில் அவர்களுடைய 'அனைத்து வகை விளையாட்டு'க்களுக்கும் எதிர் விளையாட்டை நடத்திக் காட்டி கடந்த 15 ஆண்டுகளாகச் சென்னையில் கழகத்தைக் கட்டிக் காப்பாற்றியவர்.
கருணாநித...