Shadow

Tag: உத்ஸவ் திரைப்படம்

காமோற்சவம்

காமோற்சவம்

சமூகம், சினிமா
‘காமாண்டி கூத்து’ என்பது வசந்தத்தை வரவேற்றுக் கொண்டாடும் பல தொல் பண்டிகைகளில் ஒன்று. மதுரைப் பகுதிகளில் காமன் பண்டிகை விமரிசையாகக் கொண்டாடப்படும். திண்டுக்கல்லில் காமக் கடவுளுக்கு கோவில் கூட உண்டு. முன்பொருமுறை இலாவணிப் பாடல் வகையில் காமன் பண்டிகை பற்றி ‘எரிந்த கட்சி’ என்றொரு பாடல் எழுதியிருந்தேன். இன்றும் காமாண்டி கூத்து நடைபெறுகிறது என்றாலும், வள்ளி திருமணம் போன்ற கூத்துகளுக்கு ஏற்பட்டுள்ள நிலைதான். மக்கள் கூட்டத்தை ஈர்க்க வெகு ஆபாசமாக நடத்தப்படும். இந்தக் காமாண்டி வழிபாடு என்பது பெரும் வரலாறு கொண்டது. கிளியை வாகனமாகக் கொண்டு, கரும்பு வில்லேந்தி, சந்தனம் பூசி வரும் மன்மதனும், அவனுக்கு இணையாக வரும் ரதிதேவியும், காமாண்டி வழிபாட்டின் கடவுள்கள். தமிழில் அப்படித்தான். மாயாண்டி, விருமாண்டி, சிவனாண்டி என்றுதான் கடவுள்கள் எல்லாம் குறிக்கப்படுவர். இப்பொழுது இதையெல்லாம் புதியதாகக் கேட்பவர்களுக்க...