
என் காதலியின் தந்தை
மு.கு.: பல நேரங்களில் பல மனிதர்கள் || பாரதி மணிபாபா படத்தில் தான் முதன்முதலில் அவரைப் பார்த்தேன். நல்லவராக இன்றி வேறு எவராகவும் இருக்க வாய்ப்பே இல்லாத மனிதராகத்தான் அவர் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது அவர் உருவம். என்னைப் போல் தான் எமி ஜாக்சனுக்கும் அவரைப் பற்றி அபிப்ராயம்.பின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவரைப் பற்றி சுகாவின் 'மாங்குலை இல்லாத கல்யாணம்' என்ற கட்டுரையில் படிக்க நேர்ந்தது. அந்தக் கட்டுரையில் அவர் 'பாட்டையா' என பாரதி மணியைக் குறிப்பிடுகிறார். பாட்டையா என்றால் எனக்கு என்னவென்று அப்பொழுது தெரியாது. அது இசை கட்டுரை என்பதால் கர்நாடக சங்கீதம் பாடுபவரை விளிக்கும் சொல்லென நினைத்துக் கொண்டேன். சுகாவின் அந்தக் கட்டுரையைப் படிக்கச் சொன்னது கவிஞர் பத்மஜா நாராயணன். அவர் சுகாவிற்கு நண்பர். எனக்கும் நண்பர். அதே போல் பாரதி மணிக்கும் நண்பர் எனத் தெரிய வந்தது."தினேஷ...