முதலிடத்தில் இந்தியா
அரையிறுதிக்கான அணிகள் முடிவாகிவிட்டாலும், முதல் இரண்டு இடங்களைத் தீர்மானிக்கும் போட்டியாக இந்தியா -இலங்கை , ஆஸ்திரேலியா தென் ஆஃப்ரிக்கா போட்டிகள் அமைந்தது. டாஸ் வென்ற இலங்கை கேப்டன் கருணரத்னே பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்தியா அணியில் ஷமி, சஹோலுக்கு பதில் ஜடேஜா, குல்தீப் சேர்க்கபட்டனர்.கருணரத்னே, குஷால் பெரேரா களமிறங்க புவனேஷ்வர் குமார் முதல் ஓவரை வீசினார். இலங்கைக்கான முதல் பவுண்டரியை குஷால் அந்த ஓவரில் அடித்தார். அடுத்த ஓவரை பும்ரா மெய்டினாக வீச, அடுத்து புவனேஷ்வர் குமார் ஓவரில் 12 ரன் அடித்து ரன்ரேட் உயர்த்திக் கொண்டணர். நான்காவது ஓவரில் பும்ரா கருணரத்னேவை வீழ்த்தினார். 10 ரன்னில் தோனியிடம் கேட்ச் கொடுத்து அவர் வெளியேற, ஓரு நாள் சர்வதேச போட்டியில் 100 விக்கெட் வீழ்த்திய சாதனையை பும்ரா புரிந்தார். குறைந்த போட்டியில் 100 விக்கெட்களை வீழ்த்திய இரண்டாவது இந்தியா வீரர் ...