புதுமைப் பித்தன்
மாயலோகத்தில்..
இயற்பெயர் சொ. விருத்தாசலம். இவரது பெற்றோர்களின் பூர்வீகம் திருநெல்வேலி. ஆனால் இவர் பிறந்தது கடலூர் அருகே உள்ள திருப்பாதிரிப்புலியூர் எனும் ஊர். இவரது தந்தை அப்போது இந்த ஊரில் தாசில்தாராக வேலை பார்த்து வந்தார்.
ஆரம்பக் கல்வியை திண்டிவனம், செஞ்சி, கள்ளக்குறிச்சி போன்ற ஊர்களில் கற்றார். 1918இல் தகப்பனார் ஓய்வு பெற்றதும் சொந்த ஊரான திருநெல்வேலிக்குத் திரும்பினார்கள். படிப்பைத் தொடர்ந்தவர் 1931இல் திருநெல்வெலி இந்துக் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்றார். அதே ஆண்டு (1931) இவருக்குத் திருமணம் நடைபெற்றது. மனைவி கமலா திருவனந்தபுரத்தைச் சார்ந்தவர்.
புதுமைப்பித்தனின் ஆரம்பப் படைப்புகள் டி.எஸ். சொக்கலிங்கம் நடத்திய 'காந்தி' பத்திரிகையில் வெளிவந்தது. மொத்தம் மூன்று கட்டுரைகள். அதன் பின்னர் தான் 1934இல் 'மணிக்கொடி' இலக்கிய இதழில் "ஆற்றங்கரைப் பிள்ளையார்" என்கிற சிறுகதை முதன்முதல் பிரசுரம...