எக்ஸ்பேண்டபிள்ஸ் 3 விமர்சனம்
நட்சத்திரப் பட்டாளங்களை ஒன்றிணைத்து படமெடுப்பது என்பது சாதாரண விஷயமன்று! வெற்றிகரமாக மூன்றாவது முறையாக இச்சாதனையை நிகழ்த்திக் காட்டியுள்ளார் சில்வஸ்டர் ஸ்டலோன். நான்காம் முறையும் செய்வார் என்று நம்புவோமாக! அந்நாளைய வ்ரெஸ்ட்லிங் சூப்பர் ஸ்டார் ஹல்க் ஹோகன், கவர்ச்சிகர ஜேம்ஸ் பாண்ட்டான பியர்ஸ் பிராஸ்னன் போன்றோரும் அடுத்த பார்ட்டில் இணைவதாகத் தெரிகிறது.
படத்தின் தொடக்கமே மிக அதிரடியாகத் தொடங்குகிறது. ஒரு ட்ரெயினையே சிறைச்சாலையாகக் கொண்டு, டாக்டர் டெத் எனும் கைதியை சிறைச்சாலைக்குக் கொண்டு போகின்றனர். ஹெலிகாப்டரில் வரும் சில்வஸ்டர் ஸ்டலோன் குழுவினர் டாக்டர் டெத்தை மீட்கின்றனர். ஆனால், டெத் தப்பிப்பதைவிட்டு ட்ரெயினையே ஆயுதமாக்கி ராணுவ சிறைச்சாலை மீது ஏவி நிர்மூலமாக்குகிறார். பிளேட் ஹீரோ வெஸ்லீ ஸ்னைப்சுக்கும், படத்துக்கும் இதைவிட அதிரடியானதொரு அறிமுகம் தர இயலாதென்றே தோன்றுகிறது. டாக்டர் டெத், எக்...