அற்புதமான மிருகங்களை எங்குக் காணலாம்?
‘ஃபென்டாஸ்டிக் பீஸ்ட்ஸ் அன்ட் வேர் டூ ஃபைண்ட் தெம் (FANTASTIC BEASTS AND WHERE TO FIND THEM)’ எனும் படம் ஆங்கிலத்திலும் தமிழிலும் தெலுங்கிலும் நவம்பர் 18 ஆம் தேதி அன்று வெளியாகவுள்ளது. ஹாரி பாட்டர் புத்தகங்களை எழுதிப் பெரும்புகழை அடைந்த பெண் எழுத்தாளர் J. K. ரெளலிங்கின் கற்பனையில் இருந்து உதித்த மற்றொரு படமிது. அதை விட, திரைக்கதையாசிரியராக அவதாரமெடுத்திருக்கும் முதல் படமிது என்பது இப்படத்திற்கான கூடுதல் சிறப்பு. படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராகவும் தன்னை இனைத்துக் கொண்டுள்ளார்.
‘ஃபென்டாஸ்டிக் பீஸ்ட்ஸ் அன்ட் வேர் டூ ஃபைண்ட் தெம்’ என்பது ஒரு புத்தகத்தின் பெயர். ஹாரி பாட்டர் பாடப் புத்தகமான தன் கையில் வைத்திருக்கும் இந்தப் புத்தகத்தை எழுதியவர் நியூட் ஸ்கேமண்டர். அந்தக் கதாப்பாத்திரம் தான் இந்தப் படத்தின் ஹீரோ. நியூட் ஸ்கேமண்டராக நடித்துள்ளார் எடி ரெட்மெய்ன். எந்தக் கதாப்பாத்திரத்தில் நடி...