Shadow

Tag: எனக்கு வாய்த்த அடிமைகள்

எனக்கு வாய்த்த அடிமைகள் விமர்சனம்

எனக்கு வாய்த்த அடிமைகள் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஒரு நண்பனுக்காக எந்தச் சிரமத்தையும் மேற்கொள்ளும் நண்பர்களைச் செல்லமாக 'அடிமைகள்' என்கிறார் இயக்குநர். அப்படி, ஐ.டி.யில் வேலை செய்யும் ஜெய்க்கு மூன்று அடிமைகள் உள்ளனர். அவர்கள், வங்கியில் கேஷியராக உள்ள கருணாகரன், ஷேர் ஆட்டோ ஓட்டும் காளி வெங்கட், கஸ்டமர் கேரில் வேலை செய்யும் நவீன் ஆகியோர் ஆவர். காதல் தோல்வியில் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுக்கிறார் ஜெய். அவரைத் தேடித் தடுக்க முயற்சி செய்யும் அவரின் 3 அடிமைகளுமே அநாவசிய பிரச்சனையில் சிக்கிக் கொள்கின்றனர். அடிமைகளை எப்படிப் பிரச்சனையில் இருந்து ஜெய் மீட்கிறார் என்பதுதான் படத்தின் கதை. படத்தில் நாயகன் நாயகி பெயரளவிற்குத்தான். கருணாகரனும், காளி வெங்கட்டும்தான் படத்தின் உண்மையான நாயகர்கள். ஷேர் ஆட்டோ பின்னால் சென்று ரத்தம் சூடேறுபவர்களுக்கு, காளி வெங்கட்டின் அறிமுக காட்சி மிக நெருக்கமாக அமையும். காளி வெங்கட்டின் கதாபாத்திரத்தை அனுபவித்து எழுத...
நண்பர்கள் – அன்புக்கு அடிமை

நண்பர்கள் – அன்புக்கு அடிமை

சினிமா, திரைச் செய்தி
லவ் ஃபெயிலியரான ஒருத்தனின் மூன்று பெஸ்ட் ஃப்ரெண்ட்கள் படும் அவஸ்தை தான் 'எனக்கு வாய்த்த அடிமைகள்' படத்தின் கதை. தில்லுக்கு துட்டு 'லொள்ளு சபா' ராம்பாலாவிடம் பணியாற்றிய மகேந்திரன் ராஜமணி இப்படத்தை இயக்குகிறார். 'ஆக, நண்பர்கள் தான் நாயகனின் அடிமைகளா?' என்ற கேள்விக்கு, "நண்பர்கள் அன்புக்கு அடிமை. நமக்காக எதுவும் செய்வார்கள் என்ற அர்த்தத்தில் தலைப்பை வைத்தோம். தலைவியிடம் (ஜெ.) சொல்லப்படும் இந்தப் பிரபலமான வசனத்தை எங்க கதைக்குத் தகுந்தாற்போல் உபயோகித்துக் கொண்டோம்" என்றார் மகேந்திரன் ராஜமணி. "இந்தக் கதாபாத்திரத்திற்கு என்னை விட்டா வேறு யாரும் பொருந்த மாட்டாங்க எனக் கதை கேட்டதும் ஜெய் சொன்னார். படம் பார்த்ததும் ஆடியன்ஸும் அதைச் சொல்வாங்க. நான் படத்துக்குப் போகணும்னா நினைச்சா ஜாலியான ஒரு படத்துக்குத்தான் போவேன். அந்த மாதிரி தான் என் படத்தையும் எடுத்திருக்கேன். கண்டிப்பா மக்களும் இந்தப் படத்தை...